கோவையில் ஐந்து நாட்கள் கணவன் உடலுடன்.. எந்த மனைவிக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது.. தெரிந்த உண்மை
கோவையில்: கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியில் சேட் என்பவரும், அவரது மனைவி சமீம் நிஷா என்பவரும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் அவருடைய உடலுடன் 5 நாட்கள் மனைவி சமீம் நிஷா இருந்துள்ளார். துர்நாற்றம் வீசியதால் இந்த சம்பவம் பொதுவெளியில் தெரிய வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
கோவை தெற்கு உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் சேட் என்ற அப்துல் ஜாபர் என்பவரும், 45 வயதாகும் சமீம் நிஷா என்ற மனைவியும் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு ஷாருக்கான் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சேட் என்ற அப்துல் ஜாபர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

குடிபழக்கத்துக்கு அடிமையான அப்துல் ஜாபர், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தாராம். இது ஒரு புறம் எனில், சமீம் நிஷா சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். இவர்களின் மகனான ஷாருக்கான், அவருடைய சகோதரியும் அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அப்துல் ஜாபர் வீட்டின் அருகே வசிப்பவர்கள் ஷாருக்கானின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் பெற்றோர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறியிருக்கிறார்கள். இதையடுத்து உடனே அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது வீட்டில் ஒருவித துர்நாற்றம் வீசியதை ஷாருக்கானும் உணர்ந்துள்ளார். உடனே அவர் தனது தாயாரிடம் ஏன் இவ்வளவு அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது என்று கேட்டார். அதற்கு அவர் பூனை ஏதாவது செத்துக்கிடக்கும் என்று கூறினாராம். இதையடுத்து அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அப்துல் ஜாபர் கட்டிலில் படுத்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷாருக்கானும் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீசார் கூறுகையில், 'அப்துல் ஜாபர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து 5 நாட்கள் இருக்கும் என்று எங்களுக்கு தெரிந்தது. அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது கணவர் உயிரிழந்ததுகூட தெரியாமல் அவருடைய பிணத்துடன் 5 நாட்கள் வசித்து வந்திருக்கிறார் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications