கோவையில் உயிரை பறித்த வேகத்தடை.. திடீரென அமைக்கப்பட்டதால் நடந்த துயரம்
கோவை: கோவை கொடிசியா அருகில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையை அறியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கொடிசியாவில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்படாத நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் சூலூரைச் சேர்ந்த சந்திரகாந்த் உயிரிழந்தார்.

பொதுவாக வேகத்தடைகள் என்பது அந்த பகுதிகளில் விபத்து ஏற்படக்கூடாது,யாராவது வாகனத்தில் அடிப்பட்டு இறந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அமைக்கப்படுகிறது.ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றால், அந்த வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாகவே சில நேரங்களில் முடிகிறது.
இதேபோல் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்க தடுப்புகள் வைப்பார்கள். அப்படி வைக்கப்படும் தடுப்புகளால் பலரும் விபத்தில் சிக்கி உயிரிழப்பது உண்டு. பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்ளுக்கு தடுப்புகளும் ஒரு காரணமாக இருக்கிறது. வேகத்தடை இன்னொரு காரணமாக இருக்கிறது.
பகலில் வாகன நெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த தடுப்புகள் அல்லது வேகத்தடைகளால் நல்லது நடந்தாலும், நள்ளிரவில் வருவோருக்கு அது சில நேரங்களில் எமனாகவே இருக்கிறது. அப்படித்தான் கோவையில் திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடை ஒரு உயிரையே பறித்துள்ளது. என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் சந்திரகாந்த், சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்து நடத்தி வந்திருக்கிறார். செப்டம்பர் 29ம் தேதியான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கடையை மூடிவிட்டு, சந்திரகாந்த் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு போய் கொண்டிருந்தார்.
கோவை கொடிசியா பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியார் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து சந்திரகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வேகத்தடை திடீரென புதிதாக அமைக்கப்பட்டிருந்தது தெரியாமல் வழக்கம் போல் வேகமாக வந்த சந்திரகாந்த் வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்து இறந்திருக்கிறார் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்பட்டிருந்தால் அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு குறைவு தான் என்றும் கூறுகிறார்கள்.
இதிடையே விபத்து ஏற்பட்ட பின்னர் போலீசார் அவசர அவசரமாக வேகத்தடை இருப்பதற்கான குறியீடுகளை பெயின்ட் மூலம் அடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications