“ஹலோ தம்பி போலீஸ் பேசுறோம்பா.. ஆபாச படம் பாக்குறீயாமே!” கோவையில் அத்துமீறிய மாணவர்கள்.. அதிரடி கைது
கோயம்புத்தூர்: கோவையில் ஆபாச படம் பார்ப்பதாக கூறி மாணவர்களிடையே வசூல் வேட்டை நடத்திய கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆபாச படம் பார்ப்பது தொடர்பான பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் இளைஞர்களிடையே எழுந்திருக்கிறது. எப்படி இருப்பினும் இந்த படங்களை பார்ப்பது கடுமையான உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காவல்துறையும் இது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. மறுபுறம் ஆபாச படம் பார்ப்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்கிற போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பவர்களை குறி வைத்து காவல்துறையினரின் பெயரை பயன்படுத்த சிலர் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம்தான் கோவையில் நடந்திருக்கிறது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சபரி எனும் இளைஞர் பயின்று வருகிறார். இவருக்கு தொடக்கம் முதல் கல்வியில் அதிக ஆர்வம் இல்லை. எனவே மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார். மற்ற சில இளைஞர்களும் சபரியுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றனர். இவர்கள் ஜாலியாக இருக்க பணம் தேவைப்பட்டிருந்திருக்கிறது. பெற்றோர்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.
எனவே இவர்கள் திட்டம் ஒன்றை போட்டியிருக்கிறார்கள். அதன்படி, 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் செல்போன் எண்களை சேகரித்திருக்கிறார்கள். அவர்களுக்கு போன் செய்து, "போலீஸ் பேசுறோம். நீ ஆபாச படம் பார்ப்பது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்திருக்கு. நடமாடும் நீதிமன்றம் மூலம் இது தொடர்பான விசாரணை வர இருக்கிறது" என்று மிரட்டியுள்ளனர். இப்படி மிரட்டும போது தவறாமல் வாக்கி டாக்கி சத்தத்தையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இது தொடக்கத்தில் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. பின்னர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க குறிப்பிட்ட அளவு பணத்தை கேட்டிருக்கிறார்கள்.
இப்படியாக பல இளைஞர்களிடம் பணத்தை வசூலித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களிடத்தில் சபரி குரூப் வேலையை காட்ட தொடங்கியிருக்கிறது. ஆனால் பல நாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்பதைபோல, சபரி குரூப் மீது சக இளைஞர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே அவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளித்திருக்கின்றனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது சபரி குரூப் என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணையும் நடத்தியுள்ளனர். விசாரணையில், சபரி குழுவினர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேற்குறிப்பிட்டதை போல ஆபாச படம் பார்ப்பது குறித்து சட்டம் என்ன சொல்கிறது? என்கிற புரிதல் இளைஞர்கள் மத்தியில் அதிகம் இருப்பதில்லை. சமீபத்தில் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று வந்திருந்தது. அதாவது, இளைஞர் ஒருவர் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இளைஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆபாச படத்தை பார்ப்பது குற்றமல்ல, பரப்புவதுதான் குற்றம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதேநேரம், ஆபாச படம் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் சிக்கல் குறித்தும் அவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அதிக அளவு அடிமையாகியுள்ளனர் என்று கூறியுள்ளனர். "ஆபாச படங்கள் எளிதில் கிடைப்பதால் இந்த தலைமுறையினர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். பத்தில் ஒன்பது சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் என சொல்லக்கூடிய பதின்ம வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications