ராத்திரி தண்ணியடிச்சேன்.. காலையில் அம்ருதாவை பார்த்தேன்.. புத்தி மாறிருச்சு.. கொடூரனின் வாக்குமூலம்
Recommended Video
கோவை: "நான் மாடு மேய்க்கிறவன்.. குழந்தை அம்ருதா விடிகாலை 3.30 மணிக்கு எழுந்து உட்கார்ந்திருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சபல புத்தி வந்துடுச்சு.. அதான் கிணத்து மேட்டுக்கு தூக்கிட்டு போயிட்டேன்" என்று இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்மாமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 3 தினங்களாக தமிழகத்தை உலுக்கியதுதான் அம்ருதாவின் மரணம். தூங்கி கொண்டிருந்த இரண்டரை வயசு குழந்தை எப்படி இறந்தாள், பாழடைந்த கிணற்றில் வீசி கொன்றது யார் என்று போலீசார் 2 தினங்களாக மண்டையை பிய்த்து கொண்டனர்.
வீட்டில் உள்ளவர்களை யாரை கேட்டாலும் எனக்கு தெரியாது, எனக்கு தெரியாது என்றே பதில் வந்தது. அதனால் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமானது. கிணற்று மேட்டில் காலி மது பாட்டில் கிடந்தது. இதுதான் முதல் தடயம் போலீசுக்கு.

கொலையாளி யார்?
சம்பவத்தன்று குழந்தையின் தாய் காஞ்சனாவுடன் தூங்கியது காஞ்சனாவின் சகோதரர் அதாவது முதல்மனைவி மகன் ரகுநாதன், சித்தி, அவரது மகன் பூபதி ஆகியோர்தான். இந்த 4 பேரில் ஒருத்தர்தான் கொலை செய்திருக்க முடியும் என்று போலீசார் யூகித்தனர்.

ரகுநாதன்
மதுபாட்டிலை கிணத்துமேட்டில் பார்க்கவும், ரகுநாதனுக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதை தெரிந்து கொண்டு,தங்கள் பாணியில் விசாரணையை நடத்தினர். அப்போதுதான் ரகுநாதன் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் 26 வயதான தாய்மாமன் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

குடிப்பழக்கம்
"எல்லாரும் கூட்டு குடும்பமாகதான் இருக்கோம். நான் 10 மாடு வெச்சு வளர்க்கிறேன். வீடு வீடுக்கு பால் ஊத்தறேன். குடிப்பழக்கம் இருக்கு. சம்பவத்தன்று கூட கிணத்து மேட்டில் உட்கார்ந்து தண்ணி அடிச்சேன். அப்புறம் வீட்டுக்குள் தூங்க போய்ட்டேன்.

பலாத்காரம்
விடிகாலை 3.30 மணிக்கு குழந்தை அம்ருதா எழுந்து உட்கார்ந்திருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சபலம் வந்துவிட்டது. அதனால குழந்தையை நைசாக கிணத்து மேட்டுக்கு தூக்கிட்டு போனேன். பலாத்காரம் செய்ய போனபோது, அழ ஆரம்பிச்சிட்டாள். அதனால பயந்துட்டேன்.

நடித்தேன்
வீட்டுக்கு திரும்பவும் தூக்கிட்டு போனா, எல்லாருக்கும் சந்தேகம் வந்துடும்னு நினைச்சு, வேற வழி தெரியாம, குழந்தையை உயிருடன் கிணற்றில் போட்டுட்டு வந்துட்டேன். காலைல வழக்கம்போல பால் கறக்க போயிட்டேன். அப்பறம் எல்லாரும் குழந்தையை தேடும்போது நானும் தேடுவது போல நடித்தேன். ஆனால் மது பாட்டிலால் நான் மாட்டிக்கிட்டேன்" என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications