கூலி படத்துல அப்படி என்னங்க இருக்கு?.. குழந்தைகளுக்கு என்ன தெரியும்.. கோவை 2கே கிட் குமுறல்
கோவை: கூலி படம் வசூல் ரீதியாக பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அதேநேரத்தில் எதிர்மறை விமர்சனங்கள் உள்ளிட்ட சில பிரச்சனைகளும் எழுந்து கொண்டிருக்கின்றன. கூலி படம் A சான்றிதழ் பெற்றுள்ளதால், 18 வயதிற்குட்பட்டோர் தியேட்டரில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் கோவையில் பிரபல தியேட்டரில் கூலி படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட, 17 வயது மாணவர் வெளியிட்ட ஆதங்க வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் காம்போவில் உருவான கூலி படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகியிருந்தது. இதில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. கூலி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கூலி 18+ பிரச்சனை
கூலி படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கியுள்ளது. பொதுவாக A சான்றிதழ் வழங்கப்பட்ட படத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதிற்குட்பட்டவர்கள் தியேட்டரில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரஜினி, சத்யராஜ், அமீர்கான் உள்ளிட்ட நடிகர்கள் இருப்பதால் கூலி படத்திற்கு குடும்பத்துடன் டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்தனர். பல திரையங்குகளில் 18 வயதுக்குட்பட்டோரை அனுமதிப்பதில்லை.
கோவை புரோசோன் மாலில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளுடன் வந்தவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள், தியேட்டர் நிர்வாகத்தினரிடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கேஜி சினிமாஸ் தியேட்டரிலும் இந்த பிரச்சனை வெடித்துள்ளது. கூலி படத்திற்கு அனுமதிக்காத காரணத்தால் அங்கு சென்ற 17 வயது மாணவர் ஒருவர் தன் ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
2கே கிட் ஆதங்கம்
அதில் அவர், "இப்ப பார்த்தீங்கனா நான் இன்னிக்கு 4 மணிக்கு கேஜி சினிமாஸ்ல கூலி படம் பார்க்க வந்தேன். துரதிர்ஷ்டவசமா எனக்கு 17 வயது என்பதை காரணம் காட்டி இந்தப் படம் சான்றிதழ் என்று சொல்லி அனுமதிக்க மறுக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் இருந்து 8 பேர் வந்துள்ளோம். என்னையும், என் தங்கையையும் அனுமதி இல்லை என்று மொத்த குடும்பமும் வெளியில் நின்று கொண்டிருக்கிறோம்.
இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. கூலி படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சென்னையில் என் நண்பர்கள் எல்லாம் படம் பார்த்து வந்துள்ளனர். அது ஏன் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் அனுமதிப்பதில்லை என தெரியவில்லை. கோவையில் உள்ள சின்ன சின்ன தியேட்டர்களில் எல்லா வயதினரையும் அனுமதிக்கிறார்கள்.
என்னங்க நியாயம்
விதிகள் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி தானே கடைபிடிக்க வேண்டும். கூலி படத்தில் கொலை செய்யும் காட்சி உள்ளது. ஒரு வயது குழந்தை, இரண்டு வயது குழந்தைக்கு என்ன தெரிய போகிறது. டிக்கெட்டுக்கான பணத்தை கேட்டபோது, புக் மை ஷோ ஆப்பில், முன்பதிவு செய்தால் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் பொறுப்பாக முடியாது. தியேட்டரில் நேரடியாக புக் செய்திருந்தார் திருப்பிக் கொடுப்போம் என்கிறார்கள்.
கேஜி சினிமாவில் புதிததாக திறந்த தியேட்டருக்காக தான் வந்தோம். இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. பல வழக்குகள் உள்ள படங்களை கூட வெளியிட்டுள்ளனர். கூலி படத்திற்கு அதிக எதிர்பார்ப்புடன் வந்தோம். இப்போது பணத்தையும் இழந்து நிற்கிறோம். 7 நாட்களில் பணம் திருப்பிக் கிடைக்கும் என்று என்ன உறுதி இருக்கிறது. புக் மை ஷோ ஆப்பிலும் உரிய பதில் இல்லை.
சரியா அறிவிப்பு கொடுங்க
இதில் காவல்துறையினர், பாதுகாவலர்கள் ரொம்ப பாவம். அவர்கள் தான் எல்லோருடனும் சண்டை போடுகிறார்கள். இதுபோன்ற பெரிய படங்கள் வெளியாகிறது என்றால், அடுத்தமுறை உரிய அறிவிப்பு கொடுத்து ஆன்லைன் ஆப்களில் எல்லாம் தகவல் தெரியப்படுத்துங்கள். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்." என்று கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications