Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புட்டு புட்டு வைத்த அண்ணாமலை.. கும்பிடுதானே போட்டேன்? கார் சாவி எங்கே? திமிறிய கோவை..வழக்கும் பதிவு

Subscribe to Oneindia Tamil

கோவை: தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் கூறிய நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்றிரவு திடீர் சாலை மறியல் போராட்டம் முன்னெடுத்தார்.. இதையடுத்து, அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை லோக்சபா தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார்... அண்ணாமலை போட்டியிடுவதாலேயே கோவை தொகுதி தேசிய அளவில் கவனத்தை பெற்று வருகிறது.

Did Coimbatore BJP Candidate Annamalai argue with police and Case booked against by Kovai Sulur Police

சொந்த மாவட்டம் என்பதுடன், மாநில தலைவர் என்பதாலும் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமும், நெருக்கடியும் அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிரமான பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

கோவை தொகுதி: அந்தவகையில் நேற்றைய தினமும் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கோவையில் பல இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர்.. பின்னர் காரில் அண்ணாமலை சூலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார்... அப்போது, திடீரென்று அங்கு சென்ற போலீசார் அண்ணாமலையின் காரை தடுத்து நிறுத்தினார்கள்.

எதற்காக காரை நிறுத்துகிறீர்கள் என்று அண்ணாமலை கேட்டார்.. அதற்கு போலீசார், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது, அதனாலேயே காரை தடுத்து நிறுத்துவதாகவும் போலீசார் சொன்னார்கள். இதைக்கேட்டதுமே அண்ணாமலை ஆவேசமானார். உடனே காரிலிருந்து அண்ணாமலை கீழே இறங்க, போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்..

என்ன காரணம்: "நான் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யலையே.. பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குதானே போகிறேன்? எங்க மைக் இருக்கு? நாங்கள் மைக்கை ஆஃப் செய்து வைத்திருக்கிறோம்.. மைக்கில் பேசுகிறோமா? பிரச்சாரம் செய்கிறோமா? தாமரை என்ற வார்த்தையையாவது சொன்னேனா? எனக்கு ஓட்டுப்போடுங்கள் என்று மக்களிடம் கேட்டேனா? எதுவுமே நான் செய்யவில்லையே?

10 மணிக்கு மேல் நான் பிரச்சாரம் செய்ததாக ஏதாவது ஒரு வீடியோ இருக்கா? போட்டோ இருக்கா? இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். இதோ கையை இப்படியே கும்பிடுவது போல வைத்துக் கொண்டு காரில் உட்கார்ந்துகொண்டுதானே இருந்தேன்? அதெப்படி பிரச்சாரமாகும்?

விதிமீறல்: இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டேன்.. ஒரு வேட்பாளர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்கிறார். இரவு 10.30 மணிக்கு ஒரு இடத்தில் காரை நிறுத்தி டீ குடிக்கக்கூடாதா? இது எப்படி விதிமீறலாகும்? நீங்கள் என்னிடம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறீர்கள்'' என்று போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அண்ணாமலை தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்து, சூலூரில் சாலைமறியலில் ஈடுபட்டார்.. அதற்கு பிறகு உயரதிகாரிகள் விரைந்து வந்து அண்ணாமலையுடன் சமாதானம் பேசியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

காமாட்சிபுரம்: அதாவது, சூலூர் பாப்பம்பட்டி பிரிவில் இரவு 9.57-க்கு தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்திருக்கிறார் அண்ணாமலை.. தன்னுடைய வாகனங்களிலும் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு வழக்கம்போல், வாகனத்தில் வந்துள்ளார்.. மைக், ஸ்பீக்கர்கள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை.. ஆனால், காமாட்சிபுரம் பகுதியில் வாக்காளர்களை பார்த்து கையசைத்தபடியே வாக்கு கேட்டு வந்ததாக தெரிகிறது.

உடனே இதுகுறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது.. அதற்கு பிறகுதான், அண்ணாமலையின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர் போலீசார். திடீர் சாலை மறியலில் அண்ணாமலை ஈடுபட்டதால், உயரதிகாரிகள் அண்ணாமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், சாலையிலேயே உட்கார்ந்திருந்தார் அண்ணாமலை..

இரவு 11 மணி வரை அப்படியே உட்கார்ந்திருந்ததால், கோவை - திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகே போராட்டத்தை கைவிட்டார் அண்ணாமலை.

வழக்கு பதிவு: இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு வந்து பிரச்சாரம் செய்திருக்கிறேன்.. 10 மணிக்கு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, எப்படி நான் கோயம்புத்தூருக்கு போவேன்? காவல்துறை போகக்கூடாது என்கிறார்கள்.. அதனால்தான் நடந்து கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

டிரான்ஸ்போர்ட்: சில கட்சிகளின் பணத்தை டிரான்ஸ்போர்ட் பண்ணுவதில்தான் காவல்துறையின் கவனம் முழுமையாக இருக்கிறது. அந்த பணத்தை வண்டியில் வெச்சு பங்கிடுகிறார்கள்.. ஏற்கனவே நான் சொல்வதுபோல பணப்பங்கீடுகளை யாரும் தடுக்க போறதில்லை.. கடந்த முறையும்போதும் இதே கேள்வியைதான் காவல்துறையிடம் கேட்டேன். நான் விதிமீறல் செய்தேனா? பிரச்சாரம் செய்த வீடியோ இருக்கா? என்று ஆதாரம் கேட்டேன்.

9.58-க்கே மைக் ஆப் பண்ணிட்டு வண்டிக்குள்ளதான் உட்கார்ந்திருந்தேன். மக்களை சந்திக்காமல் போனால், கெட்ட பெயர் எனக்கு வருமா? போலீசுக்கு வருமா? எங்க வண்டியை நடுரோட்டில் தடுத்து நிறுத்தி, வண்டியை விடமாட்டேன் என்றால் எப்படி போவது? வண்டியில் பிஜேபி சின்னம் இருக்கு... அதனால வண்டியை யார் பார்த்தாலும் கை காட்டதான் போறாங்க..

விதிமீறல் : நான் விதிமீறல் செய்ததாக காவல்துறை நியாயப்படுத்தறாங்க.. ரூல் புக் எங்கேன்னு காட்டுங்க.. ரோட்டில் நான் நடந்தாலே பிரச்சாரம் என்கிறார்கள்? திமுகவுக்கான தோல்வி பயத்தில் , அண்ணாமலை முகத்தை வெளியில் காட்டக்கூடாது என்றால் எப்படி?" என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை,.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+