இரவோடு இரவா.. போலீசுக்கு ஓடிய திமுக.. மார்பில் தாக்கிய பாஜகவினர்? கோவையில் அண்ணாமலையால் வந்த மோதல்?
கோவை: கோவை ஆவாரம்பாளையத்தில் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை அடித்து, உதைத்து தாக்கியிருக்கிறார்கள் பாஜகவினர்.. இந்த சம்பவமானது, திமுகவினரிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது நேற்றிரவு?
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்றிரவு பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.. அப்போது, இரவு 10 மணியையும் தாண்டி, அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்.

திமுக கூட்டணி: இதை கவனித்துவிட்ட, ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், அங்கிருந்த போலீசாரிடம் சென்றார்கள்.. தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10.40 மணி வரைக்கும் அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறாரே? அவருக்கு எப்படி அனுமதி தரலாம்?" என்று கேட்டுள்ளனர்.. உடனே பாஜகவினர் திமுக கூட்டணி கட்சியினர் மீது, தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.
இதற்கு திமுகவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இவர்கள் 2 தரப்பினரும் மோதிக்கொண்டதை போலீசார் எதிர்பார்க்கவேயில்லை.. எனவே, அங்கிருந்தவர்களை உடனடியாக கலைந்து போக செய்தார்கள்..
கலவரங்கள்: இப்படி கலவரங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, பிரச்சாரம் மேற்கொண்டிருந்த வேட்பாளர் அண்ணாமலை வாகனம் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது.. பாஜகவினரின் தாக்குதல் சம்பவத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீசார் காயமடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ், செல்லப்பா, ரங்கநாதன், சேகர், சதீஷ், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு, மதிமுகவை சேர்ந்த குணசேகரன் ஆகியோர் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்..
மார்பில் காயம்: இதில், குணசேகரனுக்கு மட்டும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டு, சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறதாம்.
இது தொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பீளமேடு போலீசிலும் இரவு 2 மணி அளவில் திமுகவினர் புகார் தந்துள்ளனர்.. இரவு நேரத்தில் இரு கட்சியினருக்கும் நடந்த மோதல், பரபரப்பான சூழலை உருவாக்கிவிட்டது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications