டேக் ஆஃப் ஆகும் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணி.. மாவட்ட நிர்வாகம் கொடுத்த உறுதி
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு மீதமுள்ள நிலத்தை இம்மாத இறுதிக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
கோவை மாவட்டம் தொழில் நகரம், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் துறையில் கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கல்வி, மருத்துவம், ஐடி துறை, தொழில் நிறுவனங்கள், தங்க நகை உற்பத்தி என கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சி
நாட்டில் வேகமாக வளரும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலிலும் கோவை மாவட்டம் இடம்பெற்றுள்ளதால் மத்திய, மாநில அரசுகள் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்கம் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. லட்சக்கணக்கான பயணிகள் கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், மற்ற நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் வசதிகளை ஒப்பிடும்போது கோவை விமான நிலையத்தில் வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன.
கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் பல்வேறு வசதிகள் இங்கு கொண்டு வரப்படும். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்க தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியது.இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலம் ஒப்படைப்பு
காளப்பட்டி கிழக்கு, மேற்கு, நீலாம்பூர், இருகூர், சிங்காநல்லூலூர், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்களுக்கு இழப்பீடு வழங்கி கையகப்படுத்தி ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டுள்ளது. சில ஏக்கர் நிலங்கள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ள நிலையில், இந்த நிலங்களை இம்மாத இறுதிக்குள் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உறுதி கொடுத்துள்ளது.
2 ஆம் கட்டமாக கூடுதலாக கோரப்பட்ட 12 ஏக்கர் நிலத்துக்கு தமிழக அரசின் நிர்வாக அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், சிறு சிறு பிரச்சனைகள் வருகின்றன. எல்லைக் கற்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கான டெண்டர் கோரப்படும். புதிய வரைபடத்துக்கான இறுதி ஒப்புதல் பெறுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications