3 வருஷம்.. முபினை NIA கண்காணிக்க தவறியது ஏன்? பாஜகதான் பதில் சொல்லணும்.. திமுக ராஜீவ் காந்தி கேள்வி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது குறித்து மாநில அரசு மீது பாஜக தொடர் விமர்சனங்களை வைத்து வருகிறது.

ஆனால் திமுக இந்த விமர்சனங்களை ஏற்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் இரண்டு கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி சில கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

 சிலிண்டர் வெடிப்பு

சிலிண்டர் வெடிப்பு

கடந்த 23ம் தேதி கோவையில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முபின் ஏற்கெனவே என்ஐஏ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று கண்டுபிடித்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வெடி பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களையும் கைப்பற்றினர். இதனையடுத்து முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை தமிழ்நாடு காவல்துறை அடுத்தடுத்து கைது செய்தது.

ஆளுநர்

ஆளுநர்

சம்பவம் தொடர்பாக விசாரணை ஒருபுறம் சென்றுகொண்டிருக்கையில் மறுபுறத்தில் இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த சம்பவத்தில் தொடக்கம் முதலிலேயே பாஜக மாநில அரசு மீது குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஆளுநர் ரவி, என்ஐஏவிடம் வழக்கு தாமதமாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும், ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

இறைவன்

இறைவன்

பாஜக தரப்பில், இது திட்டமிட்ட சதி தாக்குதல், தீவிரவாத சதிச் செயல் என குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு இந்த தாக்குதலிலிருந்து மக்களை காப்பாற்ற தவறிவிட்டது என்றும், 'இறைவன்' மட்டுமே அனைவரையும் காப்பாற்றியுள்ளார் என்றும் கூறியது. இந்த சம்பவம் தமிழ்நாடு உளவுத்துறையின் தோல்வி என்றும் விமர்சித்தனர். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி பாஜகவினிரிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பதில் சொல்லவும்

பதில் சொல்லவும்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "UAPA சட்டப்படி NIA-வின் அதிகாரவரம்பு என்பது வெறும் விசாரணை செய்து,வழக்கு பதிவு செய்து,நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது மட்டுமல்ல இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் தீவிரவாத அமைப்புகளை உளவு பார்க்கும் எல்லையில்லா அதிகாரம் கொண்ட அமைப்புதான் NIA! ஏன் 2019ல் NIA-யின் விசாரணைக்கு உள்ளான கோவை ஜமேஷ் முபின் என்ற குற்றவாளியின் வெளிநாட்டு,வெளிமாநில தீவிரவாத தொடர்புகளை கண்காணித்து கோவை பயங்கரவாத செயலை NIA முறியடிக்க தவறியது ? தமிழ்நாடு காவல் துறையை குறை கூறும் பாஜகவினர் பதில் சொல்லவும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+