எஸ்.பி.வேலுமணிக்கு கடும் சிக்கல்! 13 பேர் மீது பாய்ந்த வழக்கு! லஞ்ச ஒழிப்புத்துறை கிடுக்கிப்பிடி
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
இதன் மூலம் இனி வரும் நாட்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கடிகள் மேலும் முற்றலாம் எனத் தெரிகிறது.
கடந்தமுறை போல் வெறும் சோதனை என்பதுடன் முடித்துக்கொள்ளாமல் இந்த முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்
அதிமுக ஆட்சியில் மிகவும் பவர்ஃபுல் அமைச்சராக வலம் எஸ்.பி.வேலுமணி அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்கள் என 13 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை இது போல் சோதனை நடத்தப்பட்டாலும் இப்போது இன்று நடைபெற்ற சோதனையில் அதீத வேகமும், தீவிரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மத்தியில் காண முடிகிறது.

ரூ.58.23 கோடி
இன்று அதிகாலை முதல் கோவை, சென்னை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கேரளா என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 58 இடங்களில் ஜல்லடை போட்டு ஜலித்து தேடி வருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வேலுமணி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி ரூபாய் அதாவது 3,928% கூடுதலாக சொத்து குவித்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2-வது ரெய்டு
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்ற சொத்து விவரங்களுக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த சொத்து விவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் அசுர மாற்றம் இருந்ததன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடக்கும் இரண்டாவது ரெய்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகத் தீவிரம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்க முடியாதபடி சட்ட நுணுக்கங்களை தீர்க்கமாக ஆராய்ந்த பிறகே லஞ்ச ஒழிப்புத்துறை சாட்டையை அதிரடியாக சுழற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தன் வீடு மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் நடக்கும் ரெய்டு குறித்து இன்று மாலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications