வேலுமணி ரெய்டு.. கை முழுக்க வைர மோதிரம்.. அத்தனை களேபரத்திற்கு இடையே.. யார் அது கருப்பு சட்டையில்?
கோவை: இன்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடக்கும் நிலையில், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மீண்டும் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் ரெய்டு நடக்கிறது.
கோவையில் 41 இடங்களில் ரெய்டு நடக்கிறது.

வழக்கு
அதேபோல் இவர், இவரின் உறவினர்கள் அரசு பணத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டது தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது அண்ணன் அன்பரசன் உட்பட 13 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக 58.23 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமைச்சராக இருந்த போது முறைகேடாக சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

யார் இவர்?
இந்த ரெய்டில் கோவையில் இருக்கும் கோவைப்புதூர் பகுதியிலும் நடைபெற்றது. அங்கு இருக்கும் ஜே.ஆர்.டி. ராஜேந்திரன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டு செய்ய அங்கு அதிகாரிகள் பலர் மொத்தமாக கூடி இருந்த போதும் இவர் மட்டும் கூலாக சிரித்தபடி இருந்தார். போலீஸ் அதிகாரிகள் பலர் இங்கு பாதுகாப்பிற்காக குவிந்து இருந்தனர். ஜே.ஆர்.டி. ராஜேந்திரன் அப்போது அங்கே காரிடார் பகுதியில் சிரித்தபடி நடந்து கொண்டு இருந்தார்.

நகைக்கடை
கை முழுக்க 10 விரல்களிலும் வைர மோதிரம், தங்க மோதிரம் அணிந்து, கருப்பு உடையில் இவர் மின்னிக்கொண்டு இருந்தார். வீட்டு உள்ளே ஒரு சொகுசு காரும், வெளியே இன்னொரு சொகுசு காரும் நின்று கொண்டு இருந்தது. பெரிய செயின் ஒன்று அணிந்து இருந்தவர், ப்பார்க்கவே நடமாடும் நகைக்கடை போல இருந்தார். ரெய்டு குறித்த பீதி எல்லாம் இல்லாமல் சிரித்தபடி இங்கும் அங்கு நடந்து கொண்டு இருந்தார்.JRD ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்பம்
இவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அங்கே இருந்தனர். ரெய்டு உள்ளே நடக்கும் போது காரிடாரில் நின்று இவர் குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அதிமுக தலைகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அங்கு அதிமுக உள்ளூர் நிர்வாகிகள் அங்கு குவிந்து இருந்தனர். இவர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் பிஸ்னஸ் பார்ட்னர் மற்றும் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications