Election Result: கோவையில் நாளை இந்த வழியா போயிடாதீங்க.. போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக நாளை கோவை மாநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காந்திபுரத்திலிருந்து வடகோவை மேம்பாலம் அவிநாசிலிங்கம் கல்லூரி பாரதிபார்க் சாலை வழியாக ஜிசிடி சென்று லாலிரோடு வழியாக மருதமலை செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து பொது மக்கள் வாகனங்களும் காந்திபுரம், வடகோவை மேம்பாலம், சிந்தாமணி சந்திப்பில் வலது புறம் திரும்பி கிழக்கு பெரியசாமி சாலை வழியாக தடாகம் ரோட்டை அடைந்து லாலி ரோடு ரவுண்டானா வழியாக மருதமலை செல்ல வேண்டும்,

கோவை போக்குவரத்து மாற்றம்
மருதமலை மற்றும் தொண்டாமுத்தூர் வடவள்ளி ஆகிய இடங்களில் இருந்து நகருக்குள் வரும் அரசு, தனியார் மற்றும் பொது மக்கள் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் லாலிரோடு ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி கௌலிபிரவுன் ரோடு மற்றும் டி.பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
காந்திபார்க், முத்தண்ணன்குளம், பூசாரிபளையம் ரோடு வழியாக தடாகம்ரோடு ஜிசிடி கோவில்மேடு டி.வி.எஸ். நகர், ஆணைகட்டி செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் டி.வி.சாமி ரோடு மேற்கு வழியாக சென்று மேட்டுப்பாளையம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். தடாகம் சாலை, இடையர்பாளையம், டி.வி.எஸ். நகர், கோவில்மேடு ஜி.சி.டி வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும், தடாகம் சாலை என்.எஸ்.ஆர் சாலை சந்திப்பில் (அவிலா கான்வெண்ட்) இடது புறம் திரும்பி என்.எஸ்.ஆர் ரோடு மற்றும் அழகேசன் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
தடாகம் சாலை
பூமார்க்கெட் புரூக்பில்ட் சிந்தாமணி, வடகோவையில் இருந்து தடாகம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், அவிநாசிலிங்கம் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதிபார்க் ரோடு, ராஜா அண்ணாமலை ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி அழசேகன் ரோடு மற்றும் என்.எஸ்.ஆர் ரோடு வழியாக தடாகம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
கோவை மாநகருக்குள் அனைத்து கனரக வாகனங்களும் 4.5.2026 (நாளை) காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை தடாகம் ரோடு, மேட்டுப்பாளைம் ரோடு, மருதமலை வடவள்ளி ஆகிய சாலைகளில் வருவதற்கு தடை செய்யப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாலி ரோடு ரவுண்டாணாவில் இருந்து ஜி.சி.டி கல்லூரி மற்றும் தடாகம் ரோடு என்.எஸ்.ஆர் ரோடு சந்திப்பு (அவிலா கான்வென்ட்) வரையும், பாரதி பார்க் ரோடு, ராஜா அண்ணாமலை ரோடு சந்திப்பில் இருந்து ஜி.சி.டி கல்லூரி ரவுண்டாணா வரையும் அனைத்து தனியார் மற்றும் பொது வாகனங்கள் தடை செய்யப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications