கோவை இளைஞர்களுக்கு குட்நியூஸ் .. வரும் நவம்பர் 15ம் தேதி முக்கியமான நாள்
கோவை: கோவையில் வேலைவாய்ப்பு முகாம் வரும் நவம்பர் 15-ந்தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் தான் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் நடத்தப்படுகிறது. இதன்படி வருகிற 15-ந்தேதி காலை 10 மணிமுதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2, பட்டபடிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு பெறலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம்.
பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு பல்வேறு பணி காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனடியாக வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த முகாமில் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்கள், மனுதாரர்கள் www.tnprivate jobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் ஆபீசர் வேலை.. 40 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சவங்க தட்டி தூக்கலாம் -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications