குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை என்ற குற்றசாட்டு.. ஈஷா மறுப்பு!
கோவை: ஈஷா மீதான ஆட்கொணர்வு மனு வழக்குகள் நேற்று முடித்து வைக்கப்பட்டன. இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த வழக்கில் ஈஷா நிர்வாகம் நிம்மதியடைந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், ஈஷா யோகா மையத்திலுள்ள பள்ளி மீது சிலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதை ஈஷா மறுத்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய, ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளையின் முன்னாள் தன்னார்வத் தொண்டர்கள், தம்பதியான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் ஒரு குற்றம் சாட்டி உள்ளனர். அதில், ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எந்த முறையையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக நடத்தப்படுகிறது. ஈஷா ஹோம் ஸ்கூலில் (ஐஎஸ்ஹெச்) சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக எங்கள் மகனை பாலியல் வன்கொடுமை செய்தார். எங்களின் ஆண் குழந்தை மற்றும் எங்களின் நண்பரின் பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகினர். தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான ஈஷா அறக்கட்டளையின் குழு உறுப்பினராக நாங்கள் செயல்பட்டு வந்தோம். அப்போது இது நடந்தது.
பள்ளியில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாலும், அவர்கள் வெளியே சொல்லாமல் அதை மறைத்தனர். 16 வயது சிறுவன் இறந்ததும் கூட அங்கே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய தம்பதியான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த புகார் தவறானது, இதில் உண்மை எதுவும் இல்லை. ஈஷா மையம் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி வதந்தியை பரப்புகின்றனர் என்று கூறி இந்த செய்திக்கு ஈஷா மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஈஷா ஹோம் ஸ்கூல் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications