புருவம் உயர்த்தும் அன்னூர்.. ஆச்சரியமா இருக்கே.. யாரந்த கலாமணி.. இப்படியும் நடக்குதா.. சபாஷ் பூசாரி
கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள மாசாணி அம்மன் கோயில் பற்றிதான் இணையத்தில் செய்திகள் ஆச்சரியத்தை கிளப்பி வருகின்றன.
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் அன்னுார், சிறுமுகை ரோட்டில், கருப்பராயன் கலாமணி நகரில், கன்னிமூல கணபதி,
கருப்பராயன், மாசாணி அம்மன், கரியகாளியம்மன் கோவில்கள் உள்ளன.

சிறப்பு: இந்த கோவில் வளாகத்தில், 21 அடி உயரத்திற்கு காளியம்மன் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.. இத்துடன் மகாமண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் என பிரம்மாண்டமாக நடந்து, சமீபத்தில்தான், கும்பாபிஷேக விழாவும் நடந்து முடிந்தது..
இந்த கருப்புராயன் சுவாமி கோவில்தான், கொங்கு பகுதியிலேயே மிகவும் பிரபலமாகும்.. அதனால்தான், இங்கு அமாவாசைதோறும் கருப்புராயன், மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.. அதாவது, கறிப்படை சகிதம் சிறப்பு பூஜைகள் செய்து மதுபானம் ஊற்றி, வழிபடுகிறார்கள்.. அதுவும், கடந்த 4 தலைமுறையாக இந்த முறையிலேயே வழிபட்டு வருகின்றனர்.
கருப்பராயன் கோவில்: அதேபோல, இந்த கருப்புராயன் கோவிலில், அமாவாசை பூஜைக்கான அனைத்து நிகழ்வுகளையும், ஒரு பெண் பூசாரியே செய்து வருகிறார்.. அவர் கலாமணி. இவரே அனைத்து பூஜைகளையும் முன்னின்று நடத்துவாராம்.. அந்த நேரத்தில், கலாமணி மீது கருப்புராயன் இறங்கும் நிகழ்வு, பக்தர்களுக்கு சிலிர்ப்பை தந்துவிடுமாம்.
அதன்பிறகு, சாட்டை, அரிவாள், பிரம்பு எடுத்து துடும்பு இசைக்கேற்ப சூறாவளி வேகத்தில் கருப்புராயன் ஆட்டம் ஆடுவாராம் பூசாரி கலாமணி.. பிறகு, ஆணிமுள் செருப்பில் நின்று கொண்டு அருள்வாக்கு சொல்வாராம்.. இறதியில், கருப்பு ராயனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வும் நடக்கும்..
ஆச்சரியம்: அன்னூர் கருப்புராயன் கோவிலில், மாசாணி அம்மனுக்கு இறைச்சி படையிலை படைப்பதற்காகவும், அமாவாசை அருள்வாக்கு நிகழ்வை பார்ப்பதற்காகவே, பக்தர்கள் திரண்டு வருவார்களாம். இதுகுறித்து பக்தர்கள் பல்வேறு சிறப்புகளை நெகிழ்ந்து சொல்கிறார்கள்.
"இந்த கருப்பராயன் கோவில் சக்தி வாய்ந்தது, வேண்டிக்கொண்டால் எல்லாமே நடக்கும்.. எல்லா மாசாணியம்மன் கோவில்கலும், மண்ணினால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். இங்கு மட்டும்தான், ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மாசாணி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பூசாரி கலாமணி கடந்த 15 வருடங்களுக்கு மேல், கலாமணி பூசாரியாக இருக்கிறார்.. அமாவாசை நேரத்தில் அருள்வாக்கு கேட்கும் பக்தர்கள் நினைத்ததெல்லாம் நடந்து வருகிறது என்று சிலிர்த்து சொல்கிறார்கள். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications