Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை வெள்ளியங்கிரி மலையேற அனுமதி.. அறிய வேண்டிய முக்கியமான விஷயம்.. வனத்துறை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோயம்புத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் இருக்கிறது. இது தென்கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் மலையேற பொதுவாக பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து, மே மாதம் இறுதி வாரம் வரைக்கும் அனுமதி அளிக்கப்படும். அந்த வகையில் வரும் 1-ந் தேதி முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை மாநகருக்கு வெளியே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பூண்டி, எனும் ஊரில் தான் வெள்ளியங்கிரி மலைத் தொடர் இருக்கிறது. இங்குள்ள ஏழாவது மலையின் உச்சியில் உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி தருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

coimbatore velliangiri temple

வெள்ளியங்கிரி திருத்தலம் பஞ்சபூதத்தலமாகவும், பஞ்சமுகக் கிரிகளைத் தன்னுள் அடக்கிய தலமாகவும் போற்றப்படுகிறது. வெள்ளியங்கிரியை பொறுத்தவரை தென்கைலாயம் என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக 7 மலைகள் ஏறி நடந்து சென்றால் மட்டுமே சுயம்பு வடிவில் காட்சி தரும் சிவனைத் தரிசிக்க முடியும். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பக்தர்கள் மலை ஏறிச் செல்வது வழக்கம்.

இதன்படிவெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து, மே மாதம் இறுதி வாரம் வரைக்கும் வனத்துறை அனுமதி அளிப்பது வழக்கம். இதில் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மற்றும் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்கள் மிகவும் விசேஷமான நாட்கள் ஆகும். அந்த காலக்கட்டங்களில்வ தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து 7 மலை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.

இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி பிப்ரவரி 26-ந் தேதி வருகிறது. இதையொட்டி வெள்ளியங்கிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருக்கிறது. இதன்படி, சிவபக்தர்கள் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் மே மாதம் இறுதி வரை வெள்ளியங்கிரி மலை ஏறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மலை ஏறும் பக்தர்கள், பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. எனவே அது போன்ற பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. வெள்ளியங்கிரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

வெள்ளியங்கிரி மலையில் முதல் மலை மிகவும் செங்குத்தான பாதைகொண்டது. இதில் ஏறுவது சற்று சிரமம் ஆனது ஆகும். இதேபோல்சுவாமி முடி மலை என்று போற்றப்படும் ஏழாவது மலையும் முதல் மலையைப்போல் மிகவும் சவாலான மலையாகும். வெள்ளியங்கிரி மலையேற ஆர்வம் உள்ள பக்தர்கள், நன்கு நடைபயிற்சி எடுத்தவர்களா, உச்சி மலையில் ஏறும் போது ஏற்படும் இளப்புகளை தாங்க கூடியவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை..

ஏனெனில் கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும். அப்படி சென்ற 7 பேர் கடந்த முறை உயிரிழந்தனர். இதையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்தாக வேண்டும்.. வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாகவே செல்ல வேண்டும். முழு உடல் பரிசோதனை செய்தபிறகே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மருத்துவக்குழு 24 மணிநேரம் மலை அடிவாரத்தில் இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+