கோவை தீபாவுக்கு ஒரு நிமிடத்தில் வந்த 5.5 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
கோவை: கோவை சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். வெங்கடேஷ் வீட்டில் அவரது பாட்டி மட்டும் அண்மையில் தனியாக இருந்துள்ளார். அவரிடம் பக்த்து வீட்டில் வசிக்கும் தீபா என்ற பெண் ரூ.5.5 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துள்ளாராம். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுவாக இன்றைய சூழலில் சிசிடிவி கேமராக்கள் இருப்பது மிகவும் நல்லது.. சில நேரங்களில் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பக்கத்து வீட்டில் உள்ளவர்களே தங்க நகைகளை திருடுவது அதிகமாக நடக்கிறது. சிசிடிவி கேமராக்கள் இல்லாமல் போனால் திருடியவர்கள இவர்கள் தான் என்பதை நிரூபிக்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே சிசிடிவி கேமராக்கள் நிறுவுவது நல்லது. ஏனெனில் கோவையில் தனியாக இருந்த 96 வயது பாட்டியை தாக்கி 5.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பக்கத்து வீட்டு பெண் கொள்ளயைடித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரத்தை சேர்ந்த 45 வயதாகும் வெங்கடேஷ் என்பவர் இருசக்கர வாகனளைபழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் வெங்கடேசின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
மூதாட்டி காயம்
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி வெங்கடேஷ்ன் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். வீட்டில் அவருடைய 96 வயதான பாட்டி சரஸ்வதி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். மாலையில் வெங்கடேஷ்ன் மனைவி வீடு திரும்பியபோது, மூதாட்டி காயம் அடைந்த நிலையில் கீழே கிடந்தார். பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்திருக்கிறது.
பீரோவில் இருந்த தங்கம்
பீரோவில் இருந்த 8½ பவுன் தங்க நகைகளை யாரோ திருடி சென்றுள்ளார்கள். அதன் மதிப்பு ரூ.5½ லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்கள். அதில் ஒரு பெண் வெங்கடேஷ் வீட்டுக்குள் செல்வதும், சிறிது நேரம் கழித்து அவர் வெளியே திரும்பி வருவதும் பதிவாகி இருந்தது.
தலைமறைவான தீபா கைது
உடனே அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த பெண், பக்கத்து வீட்டை சேர்ந்த மணிகண்டனின் மனைவி தீபா (37) என்பதும், அவர் தலைமறைவாக இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. எனவே அவர் தான் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த தீபாவை போலீசார் கைது செய்தனர். அவர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 8.5 தங்க பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications