பாலியல் தொல்லையால் கோவை மாணவி தற்கொலை.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கோவை: கோவை மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தொடர்ந்து அளித்த பாலியல் தொல்லையால் 16 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்த புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்,

பாலியல் தொல்லை
ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கடுமையாக மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி 6 மாதங்களுக்கு மேலாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவருடன் படித்த மாணவர்கள் கூறுகின்றனர்.

கைப்பட எழுதிய கடிதம்
இந்தச் சூழலில் கடந்த நவம்பர் மாதம் கோவை மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகத் தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது. அந்த மாணவி உயிரிழக்கும் முன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

கைது
இதையடுத்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், மாணவி புகார் அளித்த பின்னரும், அலட்சியமாக இருந்துவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குண்டர் சட்டம்
இந்தச்சூழலில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் பாய்ந்ததன் காரணமாக அடுத்த ஓராண்டுக்கு அவரால் சிறையிலிருந்து வெளி வர முடியாது
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications