அள்ள அள்ள ஹவாலா பணம்.. பைக் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை.. கோவையில் நடந்த ஷாக் சம்பவம்
கோவை: கோவையில் இருந்து அண்டை மாநிலமான கேரளத்திற்கு ஹவாலா பணம் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. கோவையில் இரு சக்கர வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து ரூ. 56 லட்சம் ஹவாலா பணத்தை கேரளாவிற்கு கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹவாலா பணம் கடத்திய நபரை போலீஸார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக - கேரள எல்லையான வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் கந்தேகவுண்டன்சாவடி போலீசார் இன்று காலை வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக கோவையில் இருந்து கேரளத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தவர், போலீசாரை பார்த்ததும் வேகமாக இருசக்கர வாகனத்தை திருப்பிச் சென்றுள்ளார்.

விரட்டிப் பிடித்த போலீஸ்
இதைப் பார்த்த காவல் துறையினர் உடனடியகா இரு சக்கர வாகனத்தில் திரும்பிச் சென்ற நபரை விரட்டிப் பிடித்து அவரது வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தின் இருக்கை மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைக்கப்பட்டு, அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
வாகனம் பறிமுதல்
இதனைப் பார்த்த போலீஸார் உடனடியாக இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பைக்கை ஓட்டி வந்த கேரள மாநிலம், பெருந்தல்மன்னா, மலப்புரத்தைச் சேர்ந்த ஷபீக் என்பவரையும் சோதனைச் சாவடிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வாகனத்தை சோதனை செய்ததில், இருக்கையின் கீழ் பகுதி மற்றும் பெட்ரோல் டேங்கில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ. 56 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
கட்டுக் கட்டாகப் பணம்
அந்த நபர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அது ஹாவாலா பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 56 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும், பணத்தை கடத்தி சென்ற கேரளாவை சேர்ந்த ஷபீக் என்பவரையும் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications