கோவையில் பைக்கில் இருந்த பையில் ரூ.26 லட்சம்.. மாட்டிக்கொண்டு விழித்த 2 பேர்.. ஹவாலா பணம் பறிமுதல்!
கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரூபாய் 26.40 லட்சம் ஹவாலா பணம் கோவையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள காவல்துறை சோதனைச்சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு இருசக்கர வாகனம் மூலம் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது.

இதையடுத்து கேரளா நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கவரிங் வளையல்கள் ஆகியவை கொண்டு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையத்து அவற்றை கொண்டு சென்றவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் மற்றும் அப்துல் ரகுமான் என தெரியவந்தது. அவர்களிடம் அந்த ரொக்கப் பணம் குறித்து விசாரிக்கும்போது முன்னுக்கு பின் முரணாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்.
இருவரையும் க.க.சாவடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது கணக்கில் வராத ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணையில் கூடுதல் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications