கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில்

Google Oneindia Tamil News

கோவை: 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை என்று கோவை மாநகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி அரசு பள்ளி ஒன்றின் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் "மாணவரின் தாய் மொழி ஒரு கேள்வியாக கேட்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக முதல் மொழியின் கீழ் மாணவர் எடுத்துக் கொள்ள விரும்பும் உத்தேச மொழிகள் என்ற கேள்வி உள்ளது.

மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கைதொழில் ஒன்றை அதிகப்படியாக கற்றுக்கொள்ள விரும்புகிறார்களா? என்று உள்ளது.

Recommended Video

    அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில்

    3வது மொழியாக இந்தியை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கோவை மாநகராட்சி பள்ளி கேள்வியால் சர்ச்சை3வது மொழியாக இந்தியை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கோவை மாநகராட்சி பள்ளி கேள்வியால் சர்ச்சை

    ஆணையர் மறுப்பு

    ஆணையர் மறுப்பு

    இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில் 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை என்று மறுத்துள்ளார்.

    மாநகராட்சி ஆணையர் பதில்

    மாநகராட்சி ஆணையர் பதில்

    அந்த விண்ணப்ப படிவம் தான் பதவியேற்ற பின் வெளியிடப்படவில்லை. என்று கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
    குறிப்பிட்ட ஒரு பள்ளியில் மட்டுமே அப்படி ஒரு விண்ணப்பம் வந்ததாக புகார் வந்துள்ளது என்றும், அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் குறிப்பிட்ட விண்ணப்ப படிவம் போலி என்றும் அவர் கூறினார்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் இந்தி கட்டாயமல்ல என்றும் ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    இரு மொழிக்கொள்கை

    இரு மொழிக்கொள்கை

    ஆனால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்றும் மும்மொழிக்கொள்கையை தமிழகம் ஏற்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார், இப்படிப்பட்ட சூழலில் அரசு விண்ணப்ப படிவத்தில் இந்தியை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டு கற்க விருப்பமா என்று கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சைக்கு கோவை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    English summary
    Hindi in TN govt school? Coimbatore commissioner says school application fake, we will take action against particular school head master.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X