கையில் சிலேட்டுடன் குற்றவாளிபோல ஓம்கார் பாலாஜி.. அவமானப்படுத்துகின்றனர்.. இமக குற்றச்சாட்டு
கோவை: காவல் துறை, சிறைத் துறை, நீதித் துறை என்று அனைத்து இடங்களிலும் ஓம்கார் பாலாஜியின் மன உறுதியை சீர் குலைப்பதற்கும், அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்கும், அவரை உருவ கேலி செய்வதற்கும் காவல் துறையினர், சிறை துறையினர் உள்ளிட்டோரை திராவிடர் கழகம் யூடூ புரூட்டஸ், நக்கீரஸ் உள்ளிட்ட சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றன என்று இந்து மக்கள் கட்சி சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கூறியுள்ளதாவது: இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி ஓம்கார் பாலாஜியை துன்புறுத்தி இன்பம் காணும் நக்கீரன், யூடூ புரூட்டஸ் உள்ளிட்ட திமுக சார்பு போர்வையில் உலாவரும் சமூக ஊடகங்கள்.

திமுக ஆட்சி அதிகாரத்தில் ஊடுருவி அதை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தேசவிரோத இந்து விரோத காரியங்களை நடத்தி வரும் இவர்கள் எப்படியாவது ஓம்கார் பாலாஜியை அடக்கி ஒடுக்க வேண்டும் அவரது இந்து சமுதாயப் பணிகளை தடை செய்ய வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
ஈஷா யோக மையம், தியானலிங்கம், ஆதியோகி மற்றும் சற்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஈஷா பெண் சன்னியாசினிளை கேவலப்படுத்துவதும், ஈஷா ஸ்கூல் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, என்றும் ஈஷா கிளினிக்கில் தவறுகள் நடக்கிறது என்றும் ஈஷா மின் மயானம் அனுமதியின்றி செயல்படுகிறது என்றெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் நக்கீரன் கோபால் பேசினார்.
திராவிடர் கழகம் கு.ராமகிருஷ்ணன் உண்மை அறியும் குழு எனும் பெயரில் அத்துமீறி ஈசாவிற்கு நுழைந்து கலாட்டா செய்தார். காவல் துறை ஒருதலைபட்சமாக ஈஷா மீதும் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து ஈசா குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது.
இதில் பேசிய கண்டன உரை நிகழ்த்திய ஓம்கார் பாலாஜியின் பேச்சுக்கள் குறித்து திமுக ஆட்டோ தொழிற்சங்க பிரமுகர் முகமது கலீல் கொடுத்த புகாரின் பேரில் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஓம் கார் பாலாஜி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் நவம்பர் 13 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டு அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தார் இரவோடு இரவாக ஓம்கார் பாலாஜியை கைது செய்யப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டார்.
சீருடை இன்றி வந்து நள்ளிரவில் கோவைப்புதூரில் உள்ள ஓம்கார் பாலாஜி வீட்டில் அத்துமீறி நுழைந்து ஓம்காரை கடத்திச் சென்றனர் என்று தான் குறிப்பிட வேண்டும். மறுநாள் காலை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் உத்தரவு 13 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்பது இப்படி இருக்கையில் நீங்கள் கைது செய்துள்ளது சட்ட விரோதம் நீதிமன்ற அவமதிப்பு என்பதை ஆவணங்களுடன் சென்று விவரங்களை தெரிவித்து தமிழகம் முழுவதும் ஓம்கார் பாலாஜி விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்த ஆயத்தமானோம்.
இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஓம் கார் பாலாஜியை விடுதலை செய்தார்கள். இரவு முழுக்க ஓம்கார் பாலாஜியை தூங்க விடாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி பெரும் தொந்தரவு செய்தார்கள். 13 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான உடன் நீதிபதியின் உத்தரவுப்படி மன்னிப்பு என்பதை மாற்றி அமைக்க வேண்டும் நீங்களாக முன்வந்து மன்னிப்பு கோர வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
நான் பேசிய கருத்து தவறான கருத்து அல்ல நக்கீரன் கோபால் ஏற்கனவே நீதிபதிகளை, ஆளுநர்களை, முதலமைச்சரை, இந்து சன்னியாசிகளை, பெண் காவல்துறையினரை, நடிகைகளை, இப்படியெல்லாம் அவதூறு பரப்பி அவமானப்படுத்தி நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு மன்னிப்பு கோரி உள்ளார்.
நக்கீரன் கோபால் ஒரு ஹாபிட்சுவல் அஃபெண்டர் தொடர் குற்றவாளி. எனவே அவர் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் சரியானது. இது பற்றி வழக்கை நான் சந்தித்துக் கொள்கிறேன். மன்னிப்பு கேட்க முடியாது என்கிற முடிவை எடுத்தார். சிறை செல்ல ஆயத்தமானார்.
அதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஓம்கார் பாலாஜியை கைது செய்வதற்கான முயற்சி நடைபெற்றது. மீண்டும் நீதிமன்றத்தை அணுகினோம். நீதிபதி அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார். அதற்குள்ளாக கோவை காவல்துறைக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது என்று தெரியவில்லை.
உயர் நீதிமன்றத்திற்கு வெளியே அவரை கைது செய்து இரவோடு இரவாக சென்னையில் இருந்து அழைத்து வந்து கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வைத்து அவரது கையில் சிலேட் எழுது பலகையை கொடுத்து ஒரு கிரிமினல் குற்றவாளியை நடத்துவது போல படம் எடுத்து அந்தப் படத்தை யூடூ ப்ரூட்டஸ் உள்ளிட்ட ஊடகங்களுக்கு அனுப்பி வைத்து அவமானப் படுத்தி உள்ளனர்.
கோவை மாநகர காவல் துறையினர் யூடூ ப்ரூட்டஸ்க்கு போட்டோகிராபராக எப்பொழுது மாறினார்கள் என்பது தெரியவில்லை. இது அப்பட்டமான சட்ட மீறல். மனித உரிமைகளுக்கு எதிரானது. வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த அராஜகம் நடைபெற்று இருக்கிறது. இதற்கிடையில் ஓம்கார் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையிலும் அவரை துன்புறுத்துகின்ற உள்நோக்கத்தோடு இவர்கள் செயல்படுவார்கள் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. எங்கே இருந்து கோவை காவல்துறைக்கு இத்தகைய வழிகாட்டுதல் கிடைக்கிறது என்று தெரியவில்லை.
காவல்துறை சிறைத்துறை நீதித்துறை என்று அனைத்து இடங்களிலும் ஓம்கார் பாலாஜியின் மன உறுதியை சீர் குலைப்பதற்கும், அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்கும் அவரை உருவ கேலி செய்வதற்கும் காவல்துறையினர், சிறை துறையினர் உள்ளிட்டோரை திராவிடர் கழகம் யூடூ புரூட்டஸ் உள்ளிட்ட சக்திகள் பயன்படுத்திக் கொள்ளுகின்றன.
இந்து மக்கள் கட்சி சார்பில் இது குறித்து நீதித்துறை காவல்துறை உயரதிகாரிகள் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றில் முறையிட உள்ளோம் சட்டபூர்வமாக வழக்கை சந்திப்போம். ஓம்கார் பாலாஜிக்கும் இந்து மக்கள் கட்சி தொண்டர்களுக்கும் சிறைச்சாலை மற்றும் காவல் நிலைய சித்ரவதைகள் புதிதல்ல அச்சமின்றி மன உறுதியுடன் இதை எதிர்கொண்டு என்றும் எங்கள் இந்து சமுதாய பணி தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை புகார் மனு சமர்ப்பிக்கப்படும். இந்நிலை தொடர்ந்தால் தமிழகம் தழுவிய ஜனநாயக அறப்போராட்டங்களும் நடைபெறும். தமிழக முதல்வர் இது விஷயத்தில் கவனம் கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications