சாப்பாடு, தூக்கம் இல்ல..காரில் வைத்து போலீஸ் ஊரை சுத்தி காட்டுனாங்க! அர்ஜுன் சம்பத் மகன் சொன்ன தகவல்
கோவை: பிரபல செய்தி நிறுவனம் ஒன்றை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என போலீசார் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் உணவு உறக்கம் இன்றி தன்னை வைத்து போலீசார் இரவு முழுவதும் கோவையை சுற்றிக் காட்டியதாக அவர் பதிவிட்டு இருக்கிறார்.
கோவையின் பிரபலமான ஈஷா மையத்தை குறித்து அவதூறு செய்திகள் வெளியிட்டு வருவதாக நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த மாதம் கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜுன் சம்பத் மற்றும் அவரது மகனும் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓம்கார் பாலாஜி, நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்து அவதூறாக பேசியதோடு, அவரது நாக்கை அறுத்து விடுவதாக பேசி இருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று ஓம்கார் பாலாஜியை அவரது வீட்டில் வைத்து கைது செய்ததாக கூறப்பட்டது.
அவர் மீது இரு பிரிவுகளுக்கு பதிவாகி இருக்கும் நிலையில் பாலாஜி கைது செய்யப்படவில்லை விசாரணைக்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் விடுதலை செய்யப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் உணவு உறக்கமின்றி போலீசார் தன்னை காரில் ஏற்றிக்கொண்டு கோவையை சுற்றி காட்டியதாக ஓம்கார் பாலாஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,” என்னை கைது செய்து விட்டார்கள் என குதூக்களித்த கோபால் மாமாவின் அந்தரங்க ரைட்டப் விசிறிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். திராவிட ஏவல்துரையின் கோமாளித்தனத்தால் நேற்று இரவு 12 மணியளவில் கடத்தப்பட்டேன். நான் என் மீது புனையப்பட்ட கேலிக்கூத்து வழக்கிற்கு நீதிமன்றத்தை நாடிய பிறகும் சிங்கம் சூர்யா பாணியில் அதிரடியாக வீடுபுகுந்து அச்சுறுத்தும் எண்ணத்தில் அணுகினார்கள். நீதிமன்றத்தில் வழக்கின் நிலையை எடுத்துக்கூறிய பிறகும், "இல்லை உங்களை கைது செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது" என உருட்டினார்கள்.
கண்டிப்பாக பல்பு வாங்குவார்கள் என தெரிந்தே, சிரித்துக்கொண்டே வண்டியில் ஏறினேன். "ஏதேனும் மாத்திரை எடுக்கிறீர்களா" போன்ற ஆரோக்கியம் சார்ந்த கேள்விகளை கேட்டுவிட்டு நீதிபதியிடம் அழைத்து செல்ல முற்பட்டனர். காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாமலே கோவையை சுற்றிக்காட்டினார்கள். நன்றாக என்னை பார்த்துக்கொண்டார்கள், அதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். காலைக்குள் சிறைக்கு அழைத்து செல்லப்படுவேன் என்ற கனவோடு வாகனத்திலேயே உறங்கினேன்.
காலையில் விழித்தபோது அதே வாகனத்தில் சுற்றிக்கொண்டு இருந்தோம். என்னோடு இருந்த காவலர்களை பார்க்க பரிதாபமாக இருந்தது. யாரோ ஒருவரின் ஏவலுக்கு ஆட்பட்டு உறக்கமில்லாமல், சரியான உணவில்லாமல் என்னை வைத்து சுற்றிக்கொண்டிருந்தார்கள். உயரதிகாரிகள் ஆளும் தரப்பினரிடம் நற்பெயரை சம்பாதிக்க, தனக்கு கீழ் பணியாற்றும் காவலர்களை கொத்தடிமை போல் நடத்துவதெல்லாம் உட்சபட்ச பாவக்கணக்கு. அனைவரும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சிறைக்கு சென்றுவர வேண்டும் என்று எண்ணுபவன் நான்.
சிறைவாசத்தை காட்டி, அச்சமூட்டி என்னை ஒடுக்கிவிடலாம் என கோவை மாநகர காவல்துறையினர் கடந்த சில மாதங்களாக பெரும் முயற்சி செய்துவருவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட காவலரின் உடலை மீட்டுக்கொடுத்ததற்கு எங்கள் குடும்பம் குடும்பதலைவனின்றி 4 ஆண்டுகள் கழித்தது. அதே காவல்த்துறையினரால் இரண்டாம் தலைமுறையாக ஒடுக்கப்படுகிறோம். அர்ஜுன் சம்பத்தின் மகன் சிறைக்கு அஞ்சுவான் என்று காவல்துறையும், ஆளுங்கட்சியும் நினைப்பது செறிவூட்டப்பட்ட நகைச்சுவை.” என கூறியுள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications