பொள்ளாச்சியில் பெண்ணோடு கருகி கிடந்த காவல் ஆய்வாளர்.. விபத்துதான் காரணமா? பின்னணி என்ன?
பொள்ளாச்சியில் பெண்ணோடு கருகி கிடந்த காவல் ஆய்வாளர் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டில் பிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் சமைக்க சென்ற பெண் உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாத். இவர் சென்னை அயனாவரத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அண்மையில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.
இதனால் பொள்ளாச்சியில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்ட சபரிநாத், விடுமுறை நாட்களில் அவ்வப்போது பொள்ளாச்சி செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

உடலில் தீ
இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு எடுத்து, பொள்ளாச்சி சென்றுள்ளார் சபரிநாத். அவருக்கு கீழ் வீட்டில் வசித்து வந்த சாந்தி என்ற பெண்மணி உணவு சமைத்து தருவதற்காக மாடிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஏற்பட்ட பயங்கர சத்தத்தின் காரணமாக அதிர்ச்சி அடைந்த சாந்தியின் உறவினர்கள் மேலே சென்று பார்த்த போது , இருவரது உடலிலும் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இருவரும் மீட்பு
உடனே தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்தனர். அத்துடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காவல் ஆய்வாளர் மற்றும் சமைக்க சென்ற பெண் ஆகிய இரண்டு பேரையுமே தீயணைப்புத்துறையினர் சடலமாகவே மீட்டனர் . ஃபிரிட்ஜ் வெடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

சந்தேக மரணம்
வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்தே தீயணைப்பு படையினர் தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த காவல் ஆய்வாளர் உள்பட இருவரது உடலையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

என்ன காரணம்?
இதனிடையே சம்பவம் குறித்து அறிந்து கோவையில் இருந்து தடயவியல் நிபுணர் குழுவும் விரைந்து வந்து தீப்பிடித்த அறையில் தடயங்களை சேகரித்தது. தீப்பிடித்த போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. மின் கசிவு காரணமா?, வேறு பிரச்சினையா? என போலீசார் சந்தேகத்துடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் .












Click it and Unblock the Notifications