Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்ப திரும்ப பேசிய அண்ணாமலை.. ஸ்மார்ட்டாக கையாண்ட "எடப்பாடி "..நோட்ஸ் எடுக்கும் டெல்லி!என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விவகாரத்தை பாஜகவும், அதிமுகவும் அப்படியே வேறு மாதிரியாக கையாண்டு உள்ளது. முக்கியமாக அதிமுக இந்த விவாகரத்தை கூடுதல் அரசியல் தெளிவுடன் கையாண்டு உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த வாரம் தீபாவளிக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கோயம்புத்தூரில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது.

இந்த வழக்கை தற்போது என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் காரின் முன் பக்கத்தில் இருந்த தீவிரவாதி முபின் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அண்ணாமலை தொடர் புகார்

அண்ணாமலை தொடர் புகார்

இந்த சம்பவத்தில் தமிழ்நாடு போலீஸ் மிக துரிதமாக செயல்பட்டது. 10 மணி நேரத்திற்குள் தொடர்புடைய கும்பலை மொத்தமாக போலீஸ் கைது செய்தது. இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு கலவரம் எதுவும் ஏற்படாமல், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் போலீசார் தடுத்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தொடக்கத்தில் இருந்தே போலீஸ் மீது குற்றச்சாட்டு வைத்து வந்தார். அதில், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள்.'

விடவில்லை

விடவில்லை

ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகம் இதில் எச்சரிக்கை விடுத்தும் தமிழ்நாடு போலீஸ் கோட்டை விட்டுவிட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை பொய்யான பழியை சுமத்துவதாக தமிழ்நாடு போலீஸ் நேரடியாக அறிக்கை வெளியிட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து அண்ணாமலை சர்ச்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

அதிமுக

அதிமுக

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்தும் கூட.. அண்ணாமலை இன்று அந்த கோவிலுக்கு சென்று வெளியே கோலி குண்டை தூக்கி காட்டியது சர்ச்சையானது. அண்ணாமலை இந்த விவகாரத்தை இப்படி கையாண்ட நிலையில், அதிமுக தரப்பு இதை நேர்த்தியாக கையாண்டது. ஆளும் தரப்பு மீது புகார் வைக்க வாய்ப்பு இருந்தும் அதிமுக இந்த விவகாரத்தை வைத்து பெரிதாக அரசியல் செய்யவில்லை. இதை மீண்டும் மீண்டும் பேசுவது தேவையற்ற நெகட்டிவ் அரசியலை உருவாக்கும். போலீஸ் துரிதமாக எல்லோரையும் கைது செய்துவிட்டது என்பதால் அதிமுக இதில் பெரிதாக குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை.

எடப்பாடி அறிக்கை

எடப்பாடி அறிக்கை

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியின் முதலமைச்சர் என்ன பதில் கூறப்போகிறார்? உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் நிர்வாகத் திறமையற்ற, தவறு செய்பவர்களை கண்டிக்கும் சட்டப்படியான அதிகாரத்தை காவல்துறைக்குத் தராமல், காவல்துறையை தங்களுடைய பொய்யான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஏவல்துறையாக, இந்த விடியா அரசு நடத்துவதே, இப்படிப்பட்ட உளவுத்துறை மற்றும் காவல்துறையின் வீழ்ச்சிக்குக் காரணம், என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

10 எம்எல்ஏக்கள் - ஏன் தீவிரமாக்கவில்லை

10 எம்எல்ஏக்கள் - ஏன் தீவிரமாக்கவில்லை

ஆனால் இதை தவிர எடப்பாடி இந்த விவகாரத்தை பெரிதாக்கவில்லை. போலீஸ் துரிதமாக நடவடிக்கை எடுத்த காரணத்தால் இதை வைத்து எடப்பாடி சர்ச்சை எதையும் ஏற்படுத்தவில்லை. கோவையில் மட்டும் அதிமுகவிற்கு 9 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி, பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக இந்த விவகாரத்தை அதிமுக தரப்பு கையாண்டது. இது போன்ற விவகாரங்களில் அரசியல்வாதிகள் மிகவும் கவனமாக பேச வேண்டும். இந்த விவகாரம் தற்போது என்ஐஏ கைக்கு சென்றுள்ள நிலையில்.. இதை பாஜக கையாண்ட விதத்தையும், வழக்கில் நடக்கும் அப்டேட்களையும் டெல்லி தரப்பு நெருக்கமாக கவனித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

பதற்றத்தை உருவாக்கவில்லை

பதற்றத்தை உருவாக்கவில்லை

போலீஸ் விசாரணை நடக்கும் போது.. எதிர்க்கட்சியாக இருந்தாலும் கவனமாக பேசுவதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டில் இத்தனை வருடங்களாக அரசியல் நாகரீகம் இருந்தது அப்படித்தான். அதை பின்பற்றி இந்த முறையும் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இந்த விஷயத்தில் பதற்றம் உருவாக்காமல் நேர்த்தியாக கையாண்டு உள்ளனர். முக்கியமாக கோவை போன்ற தொழில்முனைவோர்கள் அதிகம் உள்ள மாவட்டத்தில் மக்கள் பதற்றத்தை விட அமைதியையே விரும்புவார்கள். அதன்படியே அதிமுகவும் இந்த விவகாரத்தை அரசியல் முதிர்ச்சியோடு கையாண்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+