கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்ராஹிம் வீட்டில் ஒரே அதிர்ச்சி.. கோழிக்கூண்டிற்குள் "சிறுத்தை" வந்தது எப்படி.. வெலவெலத்த வால்பாறை

கோழிக்கூண்டில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்த நிலையில் விசாரணை நடக்கிறது

Google Oneindia Tamil News

கோவை: கோழி கூண்டிற்குள் எப்படி சிறுத்தை வந்தது? என்ற பெருங்குழப்பத்தில் வால்பாறை வனத்துறையினர் ஈடுபட்டு வருகினற்னர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறையை சேர்ந்தவர் இப்ராகிம்.. 45 வயதாகிறது. இவர், தன்னுடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தார்.. இதற்காக வீட்டின் பின்புறம் கோழிக்கூண்டு வைத்துள்ளார்.

தினமும் காலையில் கோழிகளுக்கு இரை போடுவதற்காக வீட்டின் பின்பக்கம் இப்ராகிம் செல்வது வழக்கம்.. அப்படித்தான் காலை இப்ராகிம் அங்கு சென்றிருக்கிறார்..

ஹாயாக மாடி ஏறிய சிறுத்தை.. கண்களில் அத்தனை பசி!.. வீடியோவை பார்த்து ஈரக்குலையே நடுங்கி உறைந்த ஊட்டி!ஹாயாக மாடி ஏறிய சிறுத்தை.. கண்களில் அத்தனை பசி!.. வீடியோவை பார்த்து ஈரக்குலையே நடுங்கி உறைந்த ஊட்டி!

 கோழி கூண்டு

கோழி கூண்டு

ஆனால், கோழிக்கூண்டில் கோழிகளை காணவில்லை.. மாறாக சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது... இதனால் அதிர்ச்சியான இப்ராஹிம், உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்... வனத்துறையினரும் இப்ராஹிம் வீட்டுக்கு வந்தனர்... அங்கு இறந்து கிடந்த சிறுத்தையை பார்த்தனர்... அப்போது சிறுத்தையின் நகங்கள் கோழிக்கூண்டின் இரும்பு கம்பியில் சிக்கியவாறு கிடந்தது..

 கோழிகூண்டில் சிறுத்தை

கோழிகூண்டில் சிறுத்தை

மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏதாவது இருக்கிறதா என்றும் பார்த்தனர். உடலில் எங்குமே சிறுத்தைக்கு காயங்கள் இல்லை.. இதனால் வனத்துறையினர் குழம்பி விட்டனர்.. சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியாமல் திகைத்தனர்.. பிறகு, விசாரணையில் இறங்கினர்.. அப்போதுதான் இப்ராஹிமிடம் சந்தேகம் திரும்பியது.. அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை சொன்னார்.. இதனால் மேலும் குழம்பி போன வனத்துறையினர், அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்..

 இப்ராஹிம்

இப்ராஹிம்

கடந்த சில நாட்களாகவே, இப்ராஹிம் வீட்டில் வளர்த்து வந்த கோழிகள் தினமும் காணாமல் போய் கொண்டிருந்ததால், கடுமையான மனஉளைச்சலிலும் அதிர்ச்சியிலும் இப்ராஹிம் இருந்தாராம்.. இதையடுத்து இப்ராஹிம் மீது சந்தேகம் வலுத்துள்ளது.. கோழிகள் தினமும் காணாமல் போவதால் இப்ராஹிமே கோழிக்கூண்டில் கரண்ட் வைத்திருந்தாரா? அதன் காரணமாகவே சிறுத்தை இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

கால்நடை டாக்டர்களை வரவழைத்து, சிறுத்தையை போஸ்ட் மார்ட்டம் செய்யும் பணி துவங்கி உள்ளது.. அந்த ரிசல்ட் வந்தால்தான், சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும்.. எனினும் கோழி கூண்டில் சிறுத்தை கிடந்தது வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல, அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்ததால் பயந்து கொண்டு, மக்கள் வீட்டிலேயே உறைந்துள்ளனர்.

English summary
how did Leopard come to catch chickens near valparai and investigation is going on it கோழிக்கூண்டில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்த நிலையில் விசாரணை நடக்கிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X