காட்டிக் கொடுத்த பஸ் டிக்கெட்.. கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கு 'மூளை' நர்மதா.. சிக்கியது எப்படி?
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.இந்த கொள்ளை சம்பவத்தை விஜய் என்பவர் செய்த நிலையில், அதற்கு மூளையாக இருந்த அவரது மனைவி நர்மதா சிக்கி உள்ளார். விஜய் இன்னமும் சிக்கவில்லை
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இங்கு நவம்பர் கடந்த 27ம் தேதி இரவு 200 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

நகை திருடியது யார்: தனிப்படை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபர் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்தது உறுதியானது. நகைக்கடையில் திருடியவர் தன்னுடைய சட்டையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் வெளியில் வந்த அவர், சட்டையை நகைக்கடை வாயிலிலேயே போட்டுவிட்டு, வேறு சட்டை அணிந்து கொண்டு நகை பையுடன் கிளம்பிச் சென்றிருக்கிறார்.
பஸ் டிக்கெட் : அந்த சட்டையை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அதிலிருந்து பேருந்து டிக்கெட்டுகளை எடுத்து பார்த்த போது தான், அந்த பேருந்து டிக்கெட்டுகள் எங்கிருந்து பயணம் செய்தது என்பது தெரிந்தது. பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை ஒரு பேருந்திலும், கிணத்துக்கடவிலிருந்து கோவை வரை ஒரு பேருந்திலும் வந்திருந்தது தெரியவந்தது.
பொள்ளாச்சி பஸ்: இதனிடையே பொள்ளாச்சியில் இருந்த வந்து நகைக்கடையில் கொள்ளை அடித்தது தெரியவந்த நிலையில், அடுத்த திருப்பமாக நகைகளை கொள்ளையடித்த பின்னர் காந்திபுரத்திலிருந்து ஆட்டோ மூலம் உக்கடம் பேருந்து நிலையம் சென்றது தெரியவந்தது. உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய அவர் சிறிது நேரத்திலேயே கரும்புக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று வேறு பேருந்து மூலம் பொள்ளாச்சிக்கு சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.
விஜய் நர்மதா : இந்த நிலையில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பது பொள்ளாச்சி ஆனைமலையில் விசாரித்த போது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தருமபுரி சென்று விஜய் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த திருட்டில் விஜய்யின் மனைவி நர்மதா உடந்தையாக இருந்தது தெரியவந்தது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்க ஸ்கெட் போட்டது, நகைகளை மறைத்து வைத்தல், தப்பிச் செல்ல உதவியது என விஜய்க்கு அவரது மனைவி நர்மதா மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
காவல்துறை விளக்கம்: இதனிடைய ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது , 'ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடித்து, களவு போன நகைகளை உடனே மீட்டுள்ளோம். அறிவியல் ரீதியான தடவியல் நிபுணர்கள் உதவியுடன் புலன் விசாரணை மேற்கொண்டதில், தருமபுரியை சேர்ந்த விஜய் என்பது எங்களுக்கு தெரியவந்தது. விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை. கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார்.
மூளையாக செயல்பட்ட நர்மதா: இந்த வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது. வேறு யாருக்கேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த திருட்டில் விஜய்யின் மனைவி நர்மதா உடந்தையாக இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டிருக்கிறாரகள் , கொள்ளையடிக்க திட்டமிடவும், நகைகளை மறைத்து வைக்கவும், தப்பிச் செல்லவும் நர்மதாவின் பங்களிப்பு இருந்திருக்கிறது. நகைக்கடையில் சம்பவம் நடந்த அன்று அங்கு அலாரம் கருவி செயல்படவில்லை, பழுதாகி இருந்திருக்கிறது.
4 கிலோ தங்கம்: முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 2 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளித்தார்கள். ஆனால் தீவிர புலன் விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்துள்ளோம்.விஜய் மீது அரூர், ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பகுதிகளில் பணம் திருடியது உள்ளிட்ட சில திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நகைக்கடை அருகே கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது, சரியாக எப்படி உள்ளே நுழைந்தார், மூன்றாவது மாடிக்கு எப்படி சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கடையில் பணியாற்றுபவர்கள் தகவல் அளித்தார்களா? என்பது குறித்தும் விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தினால் தெரியவரும்.
நகைக்கடை அருகே கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது, சரியாக எப்படி உள்ளே நுழைந்தது மூன்றாவது மாடிக்கு எப்படி சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கடையில் பணியாற்றுபவர்கள் தகவல் அளித்தார்களா? என்பது குறித்தும் விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தினால் தெரியவரும்.

கொள்ளை நடந்ததது எப்படி: ஆனைமலை பகுதியை சேர்ந்த விஜய்யின் நண்பர் சுரேஷ் என்பவரிடம் விசாரித்து வருகிறோம். நகைக்கடையின் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஏசி வென்டிலேட்டரின் சிறிய வழியில் உள்ளே புகுந்த விஜய் முதலில் நகைக்கடைக்குள் சென்றதும் அவர் முதலில் பணம் இருக்கிறதா? என சோதனை செய்துள்ளார். பணம் கிடைக்காததால், டொனேசன் பணத்தையும் நகையையும் எடுத்திருக்கிறார். நகைகளை அவர் தேர்வு செய்து எடுக்கவில்லை. ரேண்டம் ஆக எடுத்திருக்கிறார். கூடிய விரைவில் விஜய் கைது செய்யப்படுவார். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications