“ரெடிதான் வரவா.. நான் தனியா வரவா”.. துணிந்து புது ரூட் எடுத்த அண்ணாமலை! அதிமுகவுக்கு சூசக அட்டாக்!
கோவை: ஒருபக்கம் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவினர் கூறி வரும் நிலையில், "சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. சில முக்கியமான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். சில மனிதர்களை எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு தனி மனிதனாக நான் தயாராகி விட்டேன்" எனப் பேசி அதிர வைத்துள்ளார் அண்ணாமலை.
அதிமுக பாஜக வார்த்தைப் போர்: அதிமுக - தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்னாமலை இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கோபத்திற்கு உள்ளாக்கியது. அண்ணா குறித்து தவறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும், அண்ணாமலை மன்னிப்ப்பு கேட்க மாட்டேன், நான் வரலாற்றில் நடந்த சம்பவத்தையே கூறினேன் என முரண்டு பிடித்தார்.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களைச் சந்தித்தனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அந்தப் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் ஆனால் தேசிய தலைமை அதனை புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மாற்றமே இல்லை: இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. நாளை எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் என்னால் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. ஒருநாள் காத்திருந்தால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிவிக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை கூறுவதற்காகவே மத்திய அமைச்சர்களை அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். கட்சி பிரச்னை குறித்து பேசவில்லை. ஐடி ரெய்டு என்கிற பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் அதிமுக கிடையாது. 1972 முதல் பல சோதனைகளை தாண்டி வளர்ந்த இயக்கம் அதிமுக. ஆகவே, சோதனைகளுக்கு பயப்படும் கூட்டம் அதிமுக இல்லை" எனக் கூறினார்.
நான் துணிஞ்சு இறங்கிட்டேன்: இந்நிலையில் கோவையில் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக உடனான கூட்டணி மோதல் பற்றி மறைமுகமாக சுட்டிக்காட்டிப் பேசினார். அண்ணாமலை பேசுகையில், "அரசியல் மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்களை பார்த்துவிட்டோம். இது ஒரு சவாலான காலகட்டம் தான். நிறைய பேரை எதிர்த்து நிற்க வேண்டிய காலகட்டம். அதை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். எத்தனை பேரை பார்த்தாச்சு. இவர்களையும் பார்ப்போம்.
ஏனென்றால், மக்களின் நம்பிக்கையை பார்த்த பிறகு, ஒரு மாநிலத் தலைவராக சில வேலைகளை நான் செய்யவில்லை என்றால், உங்கள் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன் இல்லை என்று அர்த்தமாகிவிடும். உங்கள் நம்பிக்கையை விட மாட்டேன், கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். நாம் சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. சில இடர்பாடுகளை தாண்டியாக வேண்டும். சில நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.
சில மனிதர்களை எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு தனி மனிதனாக நான் தயாராகி விட்டேன். பாஜகவும் தயாராகும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், இது அரசியல் மாற்றத்திற்கான அரிச்சுவடி. எதற்கும் நான் துணிந்துவிட்டேன். யாரையும் எதிர்க்க நான் ரெடி" என அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் திட்டவட்டமாக இருப்பதையே அவரது பேச்சு காட்டியுள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications