கள்ளக்காதல் தமிழரசியின் காதலன் கைது.. கோவை குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சித்தாள் வேலை பார்க்கும் தமிழரசி என்கிற பெண் கள்ள காதலுக்காக தன்னுடைய 4 வயது பெண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அவரின் காதலன் வசந்த் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், இருகூர் மாணிக்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி. இவருக்கு ரகுபதி என்பவருடன் திருமணமாகி, 4.5 வயதில் அபர்ணா ஶ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. தமிழரசிக்கும், ரகுபதிக்கும் கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததால் கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

illegal-affair-coimbatore-illegal-affair-tamizharasi-case-child-s-post-mortem-report-creates-shock

தமிழரசி மற்றும் குழந்தை அபர்ணா ஶ்ரீ இருகூர் பகுதியில் வந்து வந்தனர். தமிழரசி, கட்டிட வேலை செய்து வருகிறார். இதனிடையே தர்மபுரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வசந்த் என்ற இளைஞருடன் தமிழரசிக்கு தொடர்பாகியுள்ளது. இருவருக்கும் நெருக்கம் அதிகமாக கள்ள காதலாக மாறியுள்ளது. தமிழரசியின் வீட்டுக்கு வசந்த் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

குழந்தையை கொல்ல சதி

இது தமிழரசியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிலர் குழந்தையின் எதிர்காலத்தை சொல்லி தமிழரசிக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து அவர்களின் கள்ள காதல் உறவுக்கு குழந்தை அபர்ணாஶ்ரீ தடையாக குழந்தையை கொலை செய்ய தமிழரசி - வசந்த் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் குழந்தை அபர்ணாஶ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து விட்டதாக தமிழரசி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அபர்ணாவை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில், அபர்ணா ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

உறவினர்கள் சந்தேகம்

குழந்தை மரணமடைந்த தகவல் அவரின் தமிழரசியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் குழந்தை அபர்ணாவின் உடலை மீட்டு இதை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். என்ன நடக்கிறது என தெரியாமல் தவித்த உறவினர்கள் குழந்தை அபர்ணாஶ்ரீயின் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கிறது என்று புகார் எழுப்பினார்கள்.

இதையடுத்து சிங்காநல்லூர் காவல்துறையினரும் சந்தேகம் அடைந்து தமிழரசியிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் தமிழிரசியே அபர்ணாஶ்ரீயின் கழுத்து நெரித்து கொலை செய்ததும், பிறகு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் நாடகமாடியதும் தெரியவந்தது. தமிழரசியே வாக்கு மூலம் அளித்த காரணத்தால் காவல்துறையினர் இதை கொலை வழக்காக மாற்றினர்.

பிரேதப் பரிசோதனை அதிர்ச்சி

குழந்தை அபர்ணாவுக்கு கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டதில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தையை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலன் வசந்துடன் சேர்ந்து வாழவும் தமிழரசி திட்டமிட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் தமிழரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரத்தில் தமிழரசியின் காதலன் வசந்த் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கோவையில் வைத்து வசந்தை கைது செய்துள்ளனர். தமிழரசி - வசந்த் இருவரையும் சிறையில் அடைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+