கோவை கரும்புக்கடையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு.. ஆம்புலன்ஸ் கூட போக முடியவில்லை.. பறந்த புகார்
கோவை: கோவை மாநகராட்சி உட்பட்ட கரும்புக்கடை சாரமேடு பகுதியில் உள்ள சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றக்கோரி கரும்புக்கடை சாரமேடு பகுதி குடியிருப்போர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரிடம் மனு அளித்தனர்.
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதி குடியிருப்போர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், "கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கரும்புக்கடை சாரமேடு ரோடு பகுதிகளில் 86-வது வார்டு,84 வது வார்டு மற்றும் 62 வாக்கப்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகளால் மொத்தம் 20 பகுதிகளை சேர்ந்த 2000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு இடங்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மேலும் இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் தற்பொழுது வர எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் அப்பகுதியில் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிக் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட பலர் இதனால் அவதி அடைந்து வருவதாக மூன்று வார்டுகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுடன் இணைந்து கோவை மாநகராட்சி வளாகத்தில் புகார் அளித்தனர்.
கோவை, கரும்புக்கடை பகுதியில் வீதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள் அதிவேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, கரும்புக்கடை ஆசாத் நகர், ஐந்தாவது வீதியில் விடுமுறை தினம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மூன்று சிறுவர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பாமல் அதிவேகமாக வந்தனர்.
மேலும் வேகத்தை குறைக்காமல், வந்து அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் மீது மோதிய வேகத்தில் வாகனத்தை நிறுத்த முடியாமல் சிறிது தூரம் சென்று நிறுத்தினர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்ததும், அதில் இருந்து மூன்று பேர் வந்ததும் தெரிய வந்தது.
குடியிருப்பு வீதிகளில் குழந்தைகள் முதியவர்கள் நடமாடுவார்கள் என்ற அச்சமின்றி சிறுவர்கள் பந்தய வேகத்தில் செல்வதை காவல் துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications