கோவை, திருப்பூருக்கு சட்டவிரோதமாக படையெடுக்கும் வங்கதேசத்தினர்.. ஆக்சனில் இறங்கிய போலீஸ்
கோவை: வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனற பெயர் பெற்ற கோவை தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி கொண்டிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரு உற்பத்தி நிறவனங்கள் இயங்கி வருகின்றன.

வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக
இதேபோல திருப்பூர் மாவட்டம் பின்னலாடை உற்பத்தியில் முதன்மையாக உள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். மேலும் நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் நூற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறார்கள். இதில் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு வங்கதேசம் நாட்டைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக கோவை கியூ பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னணியில் ஏஜென்ட்கள்
தகவல் அறிந்த கியூ பிரிவினர், அன்னூர் காவல்துறையினருடன் இணைந்து அந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் சோதனை நடத்தினர். தொழிலாளிகள் தங்கியிருந்த அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஏராளமான ஆவணங்களை சோதனை செய்யப்பட்டது. அப்போது எந்தவித ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் கண்டறியப்பட்டனர்.
காவல் துறையினர் அவர்கள் 11 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் அன்னூர் பகுதியில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். வங்கதேசம் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வந்துள்ளனர். கடந்த வாரம் அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏஜென்ட்கள் மூலமாக அவர்கள் அழைத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது.
முகாமில் ஒப்படைப்பு
இதன் பின்னணியில் உள்ள ஏஜென்ட்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேர் சேலத்தில் உள்ள வங்கதேச அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேபோல கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர். அடுத்தடுத்த கைதுகளால் கொங்கு மண்டலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications