நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்... கன மழையுடன் காற்றும் வீசும்... இந்திய வானிலை எச்சரிக்கை!!
கோவை: நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கன மழையால் இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல ஏக்கரில் பதிவிடப்பட்டு இருக்கும் விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டக் கலைத்துறையும் பெரிய அளவில் நீலகிரியில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி அருகே இருக்கும் கூடலூரில் 349 எம்எம் தேவலாவில் 360 எம்எம், வால்பாறையில் 230 எம்எம் மழை நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவையில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறுகையில், ''கேரளா, வால்பாறை, ஆனைமலை ஆகியப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும். பலத்த மழையுடன், காற்றும் இருக்கும்'' என்று அறிவித்துள்ளார்.
நீலகிரியின் பல இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குந்தா தால்லூகாவில் ஐந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளான. இங்கு 26 குடிசைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்தலூர் தாலோகாவில் பழங்குடியின மக்களின் சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மீட்புப் படையினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பெய்த மழையினால் நீலகிரியின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.
கடந்தாண்டும் இதே நாளில் நீலகிரியில் அதீத மழை பெய்தது. கடந்தாண்டு அவலாஞ்சியில் 820 எம்எம் மழை ஆகஸ்ட் 8ஆம் தேதியும், ஆகஸ்ட் 9ஆம் தேதி 911 எம்எம் மழையும் பெய்து இருந்தது. அதேபோல் இன்றும் கன மழை பெய்யும் என்று அறிவித்து இருப்பது நீலகிரி மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் இருவரும் பார்வையிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications