பரபரக்கும் கோவை தேர்தல் களம்.. வேட்புமனு தாக்கல் செய்த 6 மாத கர்ப்பிணி.. தேர்தலில் ஒளிருமா டார்ச்..!

Subscribe to Oneindia Tamil

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாநகராட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Recommended Video

    கோவை: வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணி - வீடியோ

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

    In Coimbatore A 6 month pregnant woman has filed a petition to contest the elections

    பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பின்பு மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள், பாமக, மநீம மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தக்கல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை உள்ள ஆர்.எஸ்.புர‌ம் ப‌குதியில் உள்ள‌ மேற்கு ம‌ண்ட‌ல அலுவ‌லக‌ம் ப‌குதியில் ஐந்த‌வ‌து நாளாக வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இன்று ஆறு மாத‌ கால‌ க‌ர்ப்பிணி பெண்ணான‌ மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ந‌ந்தினி என்ப‌வ‌ர் 40வது வார்டில் போட்டியிட வேண்டி வேட்பு ம‌னுவை தாக்க‌ல் செய்தார். இவர் பி.எ.ப‌ட்ட‌தாரி ஆவார். மேலும் கோவையில் ம‌க்க‌ள் நீதி மய்ய‌ம் க‌ட்சியை சேர்ந்த‌ 11 பேர் இன்று பல்வேறு வார்டுகளில் போட்டியிட வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்துள்ள‌ன‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+