கோவையில் அண்ணாமலை வெல்வாரா? பாஜகவுக்கு அதிர்ச்சி தந்த தந்தி டிவி சர்வே.. வெற்றி யாருக்கு தெரியுமா?
கோவை: கோவை லோக்சபா தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இங்கு திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் அதிமுக, பாஜகவை தாண்டி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெல்வரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. தந்தி டிவி சார்பில் மேற்கொண்ட சர்வே என்பது அண்ணாமலை மற்றும் பாஜகவுக்க அதிர்ச்சியை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கோவை தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவது தான்.

கோவையில் பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி பி ராஜ்குமார், சீமானின் நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகன் நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் தொழில்வளம் மிகுந்த கோவை என்பது அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அது திமுகவின் கோட்டையாக மாறியது. இதனால் கோவை தொகுதியில் வென்று இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுக போராடுகிறது. அதேபோல் தங்களின் கோட்டை தான் திமுக என்பதை மீண்டும் நிரூபிக்கும் முனைப்பில் திமுக உள்ளது. அதேவேளையில் பாஜகவும் தமிழ்நாட்டில் தென்மாநிலம் மற்றும் கொங்கு மண்டலத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறது.
இதனால் தான் கொங்கு மண்டலமான கோவையில் அண்ணாமலையை களமிறக்கப்பட்டுள்ளார். இதனால் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அண்ணாமலை தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் தந்தி டிவி சார்பில் கோவை லோக்சபா தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் முடிவில் பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி காத்துள்ளது. அதாவது கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 3வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்திடிவியின் கருத்து கணிப்பின்படி கோவை தொகுதியில் திமுகவின் கை ஓங்கி உள்ளது. திமுக வேட்பாளர் கணபதி பி ராஜ்குமார் 31 முதல் 37 சதவீதம் வரையிலான ஓட்டுகளை பெற்று வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அதிமுக 2 வது இடத்தை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 28 முதல் 34 சதவீத ஓட்டுகளை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளார். அவர் 26 முதல் 32 சதவீத ஓட்டுகளை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இது பாஜகவினருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கூட இன்னொரு விஷயத்தை தந்திடிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதாவது கோவையில் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கான ஓட்டு சதவீதம் என்பது உயர்ந்து கொண்டே வருகிறதாம். இது தேர்தலில் எதிரொலிக்கும் பட்சத்தில் அண்ணாமலைக்கு பாசிட்டிவ்வான ரிசல்ட் வர வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு அதிமுக வலுவாக உள்ளது. இங்கு அண்ணாமலை அதிக ஓட்டுகளை பெறும் பட்சத்தில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்த தொகுதியை தந்தி டிவி கருத்து கணிப்பில் கடும் இழுபறி நிலவும் தொகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக, பாஜகவை தவிர சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 5 முதல் 8 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெறுவார் எனவும், மற்றவர்கள் ஒன்று முதல் 3 சதவீத ஓட்டுகளை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications