கோவை ஆட்சியரின் அனுமதியுடனே வடிவமைக்கப்பட்ட ஆதியோகி சிலை .. ஈஷா யோகா மையம் பரபரப்பு விளக்கம்
கோவை: கோவை ஆட்சியரின் அனுமதி பெற்றே ஆதியோகி சிலை கட்டப்பட்டது என ஈஷா மையம் விளக்கமளித்துள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் தொடர்ந்திருந்த வழக்கில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் குற்றம்டாட்டியிருந்தார்.

அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறி, அவற்றிற்கு தடை விதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். 2017ல் தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விதிமீறி கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டிட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் கடந்த 2012ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவும், இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தலைமை கங்காபுர்வாலா, ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களுன் தங்கள் அலுவலகத்திலோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை என தெரிவிக்க்பபட்டது.
வழிபாட்டு தலத்திற்கான மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பட்டியலில் தரப்பட்டுள்ள நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆஜராகி, ஈஷா பவுண்டேசனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேசன் நிர்வாகி பெறவில்லை என்றும், அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன்பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி இந்த வழக்கு தொடர்பாக கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறை துணை இயக்குனர் ஆர்.ராஜகுரு நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆதியோகி சிலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு திட்ட அனுமதியோ கட்டுமான அனுமதியோ வழங்கியதற்கான ஆவணங்கள் எதுவுமே எங்கள் அலுவலகத்தில் இல்லை. மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்தும் தடையில்லா சான்று பெற்றதற்கான ஆவணங்களும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் உரிய அனுமதி பெறவில்லை என தெரியவந்தால் சட்டப்படிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஷா யோகா மையம் தன்னிடம் உள்ள ஆவணங்களை இரு வாரத்திற்குள் அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஈஷா மையம் கூறுகையில் ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் எங்களிடம் உள்ளது.
எங்கும் எப்போது கேட்டாலும் அதை சமர்ப்பிப்போம். கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே ஆதியோகி சிலை கட்டப்பட்டது . இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டே கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றோம். ஆதியோகி சிலை எவ்வித அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறுவது எல்லாம் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications