விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்! காரில் மருத்துவமனை அனுப்பி வைத்த கனிமொழி!
கோவை: கோவை அருகே விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை காரில் ஏற்றி அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தார் கனிமொழி எம்.பி.
கோவையில் கனிமொழி: கனிமொழி நினைத்திருந்தால் தன்னுடன் வந்த கட்சிக்காரர் ஒருவரிடம் மாணவரை மருத்துவமனை அனுப்பி வைக்குமாறு சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல், மனம் கேட்காமல் சாலையில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கே சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்துள்ளார்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு: திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. கோவையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து திருப்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
விபத்தில் சிக்கிய மாணவர்: அப்போது அவிநாசி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மாணவர் ஒருவர் லாரியில் மோதி விபத்தில் சிக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். விபத்தில் சிக்கிய மாணவரை மீட்டு, திமுக நிர்வாகி ஒருவரின் காரில் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் கனிமொழி. அதனைத் தொடர்ந்து, மாணவரை சேர்த்துள்ள கோவை பிரேமா மருத்துவமனைக்கு நேரில் சென்ற கனிமொழி எம்.பி. மாணவரின் உடல் நிலையை கவனித்து தெரிவிக்குமாறு மருத்துவரிடம் கூறினார்.
காரில் மருத்துவமனை அனுப்பி வைப்பு: விபத்தில் சிக்கிய மாணவர் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் கோவை Dr. NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து வரும் ராபின் என்பது தெரிய வந்தது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மாணவர் உயிருக்கு போராடி கொண்டிருந்த சூழலில், அவரை சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கனிமொழி எம்.பி களமிறங்கி காரில் மருத்துவமனை அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications