மேடம், நீங்களா? கோவை மாசாணி அம்மன் கோயில் வாசலில் ஒரே பரபரப்பு.. மலைத்து பார்த்த பொள்ளாச்சி போலீஸ்
கோவை: கோவை ஆனைமலை பகுதியில் பரபரப்பாக டியூட்டியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. யாரிந்த பெண்? இப்படியும் ஒரு கனவா? என்று பொள்ளாச்சி போலீசார் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார்கள்.
கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற கோயில், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலாகும்.. இங்கு அம்மன் சயன கோலத்தில் இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். இந்த மாசாணி அம்மன் கோயில், ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

கோயில் பாதுகாப்பு: மாசாணியம்மனைச் சுற்றி வலம் வந்தால் தீராத வியாதிகளும் தீரும் என்கிற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது.. அதனால்தான் இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தவாறே இருப்பார்கள்..
அந்தவகையில், நேற்றைய தினமும் கோயிலில் வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.. அதுவும் இல்லாமல், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். எனவே இதையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்..
கூட்ட நெரிசல்: அந்தவகையில், பெண் கான்ஸ்டபிள் ஒருவரும், பரபரப்பாக கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தார்.. ஒரு இடத்தில் நிற்காமல், இங்குமங்கும் ஓடோடி சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்... ஆனால், அந்த பெண் போலீஸை, இதற்கு முன்பு, உள்ளூர் போலீஸார் யாருமே பார்த்ததில்லை. எனவே, அவர் எந்த ஸ்டேஷனை சேர்ந்தவர் என்பது தெரியாமல், அவரிடம் சென்று உள்ளூர் போலீசார் பேசினார்கள்... நீங்கள் எந்த ஸ்டேஷன்? என்றும் விசாரித்திருக்கிறார்கள்.
அதற்கு அந்த பெண் கான்ஸ்டபிள், "திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், ஸ்பெஷல் டியூட்டியாக இப்போது கோயிலுக்கு வந்திருப்பதாகவும்" சொன்னார்.
உள்ளூர் போலீஸ்: ஆனாலும் அவரது பேச்சில் சந்தேகமடைந்த உள்ளூர் போலீஸ், தங்களது ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், அந்த பெண்ணின் பெயர் ரீத்தா என்பதும், திருப்பூரை அடுத்துள்ள வீரபாண்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது..
ஆனால், இவர் போலீஸ் கிடையாது.. சின்ன வயசில் இருந்தே போலீஸாக வேண்டும் என்று ஆசையாம்.. காவல்துறையில் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற கனவிலும் இருந்துள்ளார்.. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையாம். அதனால்தான், இப்படி காக்கி யூனிபார்மை அணிந்து கொண்டு, களத்தில் இறங்கி வேலை பார்ப்பதாக சொன்னார்.
வார்னிங்: போலீஸ் ரீத்தா மீது வழக்குப்பதிவு பதிவு செய்து, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.. ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடுமையாக எச்சரித்து அனுப்பிவிட்டார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணபள்ளியை சொந்த ஊராக கொண்ட ரீத்தா, காவல்துறையின் மீது உள்ள ஈர்ப்பினால் பலமுறை காவல் பணியில் சேர முயன்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துவிட்டாராம்.
எனினும், இந்த போலீஸ் டிரஸ் அணிந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில்தான் கோவிலில் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறினார். ஆனால் இதுக்கு முன்பு வேறு எங்கேயுமே இப்படி போலீஸ் உடையில் அணிந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லையாம். இதுதான் முதல்முறை என்பதால், முதல்முறை டியூட்டியின்போதே போலீசில் சிக்கிவிட்டார் ரீத்தா.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications