கோவையில் அதிசயம்.. முருகன் கோயிலில் திகைச்சு போய் நின்ற கோயம்புத்தூர் ஜனம்.. மயில் வேற அசையவேயில்லை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே முருகன் கோவிலில் நடந்த சம்பவம்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும்.

Kovai Periyanaickenpalayam temple Murugan statue opened eyes and Coimbatore people crowded over night

பக்தி: பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வார்கள்.. எனவே, 20 வருடங்களுக்கு முன்பு இந்த கோயில் நிர்மாணம் செய்யப்பட்டது.

கோவில் வளாகத்தில் பிரதான தெய்வமாக செல்வவிநாயகர் அருள்பாலித்து வருகிறார் இந்த கோவில் வளாகத்தில் கன்னி மூல கணபதி, கல்யாண முருகர், பாலமுருகன், வீர ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. எனவே, பக்தர்களின் வருகை எப்போதுமே உள்ளதால் இந்த பரபரப்பாகவே காணப்படும்,

கோயில் வளாகம்: இந்நிலையில், நேற்று இரவு, கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியம் என்பவர், பூஜையை முடித்துவிட்டு, சன்னதியின் கதவை அடைக்க சென்றுள்ளார்.. அப்போது, கோவில் வளாகத்தில் இருந்த பாலமுருகன் சிலை கண் திறந்து இருப்பது போல தோற்றம் இருந்தது. உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவும், அவர்களும் விரைந்து வந்தார்கள்.

கோவில் வளாகத்தில் மொத்த பேரும் திரண்டு முருகனை வழிபட்டனர். இது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் விரைந்து பரவியது. இதை பற்றி தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு குவிந்தனர். வேலைக்கு சென்று திரும்பி மக்களும் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இரவெல்லாம் பக்தர்கள் வந்தபடியே இருந்தனர். மேலும் இதை செல்போன்களில் படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பினர்.

கோவை அருகே மளிகை கடைக்கு விறுவிறுன்னு போன மேத்யூ.. தங்கத்தை பார்த்து தடுமாறிய மனசு.. கடைசியில் ஆப்பு

ஆச்சரியம்:
இது ஒருபக்கம் என்றால், நேற்றைய இதே திருப்பூர் மாவட்டத்தில், இதுபோலவே ஒரு முருகன் கோயிலில் இன்னொரு ஆச்சரியம் நடந்தது.. வடமலைப்பாளையம் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா சிறப்பாக நடந்தது.

பூஜை சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மயில் கோவிலுக்கு வந்தது. அது முருகன் மூலஸ்தானத்தின் முன்பு நின்றுக்கொண்டு பூஜை முடியும்வரை முருகனை வழிபட்டது. இதனால், முருகனுடன் சேர்ந்து மயிலுக்கும் ஆரத்தி காட்டப்பட்டது. முருகன் பக்கத்தில் அசையாமல் நின்று சுவாமியை வழிபட்டு நிற்பதை பார்த்து பக்தர்கள் ஆச்சரியப்பட்டு, இதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+