கோவையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்.. கொடீசியா சிறப்பு வார்டில் குறைந்த கழிப்பறைகளால் அவதி!
கோயம்புத்தூர்: கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதுடன், போதிய வசதிகள் கொடீசியா அரங்கில் இருக்கும் கொரோனா வார்டுகளில் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது. நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகள் இஎஸ்ஐ மருத்துவமனியில் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு முன்னதாக சிறிய அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள் கொடீசியாவில் அமைக்கப்பட்டு இருக்கும் சிறப்பு கொரோனா அரசங்கில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொடீசியாவில் தற்போது 400 படுக்கைகள் இருப்பதாகவும், அவற்றில் 300 படுக்கைகள் நிறைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், தற்போது இருக்கும் 300 நோயாளிகளுக்கும் சேர்ந்து வெறும் நான்கே கழிப்பறைகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்திகளை நோயாளிகளே தங்களது வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகின்றனர்.
இங்கு இப்படி என்றால் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருக்கும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. இஎஸ்ஐ மருத்துவமனையின் நெருக்கடியை சமாளிக்கவே கொடீசியாவில் தற்காலிக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உடல் நிலை மோசமாகும் நோயாளிகள் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை உயர் அதிகாரிகள் மறுத்துள்ளனர். கொடீசியாவில் 15 கழிப்பறைகள் உள்ளன. அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன. பெண்கள், ஆண்களுக்கு என்று தனித் தனியாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், இஎஸ்ஐ மருத்துவமனையில் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications