பிணத்தைக் கூட விட்டு வைக்கவில்லை.. கோவை அரசு மருத்துவமனை ஊழியர் செய்த கேவலமான காரியம்
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் தங்க காசுகளை திருடிச் சென்ற ஊழியரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற வந்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 20 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 21 ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது உடலை பெறுவதற்காக அவரது மகள் செல்வி தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி மற்றும் தங்கக் காசுகள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த செல்வி மற்றும் உறவினர்கள் இதுகுறித்து அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால், தங்களுக்குத் தெரியாது என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், தாலி சங்கிலி திருட்டில் ஈடுபட்டவர் செல்வபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. ராஜசேகர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில், உயிரிழந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்து 6 கிராம் எடையுள்ள தாலியை திருடியது தெரியந்துள்ளது. இதையடுத்து, ராஜசேகரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஒப்பந்த ஊழியர் செயினை திருடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications