Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி.. மா.கம்யூனிஸ்ட் கட்சியினரால் பரபரத்த கோவை! அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கார்ல் மார்க்ஸின் கொள்கைகள் ஆளுநர் ஆர் என் ரவி சமீபத்தில் விமர்சித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சுமார் 50 க்கும் அதிகமானவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று அதிரடியாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அங்கு அவர் எடுத்து கூறும் கருத்துகள் அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

சமீபத்தில் அவர் ஜெர்மானிய தத்துவவியலாளரான கார்ல் மார்க்ஸ் பற்றிய சில குறிப்புகளை தெரிவித்தார். இது தமிழ்நாட்டில் மீண்டும் விவாதத்தை கிளப்பியது.

கருப்பு கொடி போராட்டம்

கருப்பு கொடி போராட்டம்

அதாவது கார்ல் மார்க்ஸின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானது. அதுஇந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசினார். இதற்கு கம்யூனிஸ்ட் உள்பட பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி எங்கு சென்றாலும் கூட கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

கோவையில் திரண்ட கட்சியினர்

கோவையில் திரண்ட கட்சியினர்

இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்று வந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து இன்று சென்னை ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். சென்னை செல்வதற்காக ஆளுநர் ஆர்என் ரவி கோவை வந்தார். விமான நிலையம் அருகே சிட்ரா பகுதியில் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டனர்.

குண்டுகட்டாக கைது

குண்டுகட்டாக கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. மேலும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் கருப்பு கொடி காட்ட வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட 50க்கும் அதிகமானவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்பு நடந்தது என்ன?

முன்பு நடந்தது என்ன?

முன்னதாக உதகை ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி தங்கியிருந்தார். ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் சிபிஎம்., சிபிஐ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்ற நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+