கோவை மக்களுக்கு குஷிதான்.. பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!
கோவை: கோவை மாநகரில் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை இன்று அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு.
கோவையில் அரசு பேருந்துகளுக்கு காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளன. தனியார் பேருந்துகளுக்கு கோவை மாநகராட்சி - மத்திய மண்டலத்தில் வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பால பகுதி அருகே சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் மற்ற அவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து நிலையத்தை ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சி தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுத்தது. காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன.
ரூ.3.68 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 40 முதல் 50 பேருந்துகள் நிறுத்த முடியும். பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு தேவையான வசதிகள் இந்த வளாகத்தில் வழங்கப்பட்டுள்ளன.
பாலூட்டும் அறை, காத்திருப்போர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கட்டண கழிப்பிடம் மற்றும் 32 கடைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டது.

இதை இன்று திறந்து வைக்கவும் கோவை மாநகராட்சி மற்றும் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் ரூ. 30.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 15 புதிய திட்ட பணிகளை திறந்து வைக்கவும், ரூ.271 கோடி மதிப்பீட்டில் 1028 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கோவை வந்தார்.
கோவையின் பொறுப்பு அமைச்சரும் தமிழக மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி உடன் இணைந்து, அமைச்சர் கே.என்.நேரு இந்த வளாகத்தை திறந்து வைத்தார். அத்துடன் முடிவற்ற புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அறசு கொறடா கா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications