நெஞ்சுல கை வச்சு தள்ளிய பாதுகப்பு படை! அமைச்சர் முத்துசாமியின் பெருந்தன்மை குணம்!
கோவை: கோவை விமான நிலையத்தில் தன்னை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று தடுத்து நிறுத்திய விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பெருந்தன்மையோடு கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.
வந்திருப்பது அமைச்சர் என்று திமுகவினரும், தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு படை வீரர்களிடம் எடுத்துச் சொல்லியும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் அதை கவனிக்கவில்லை என்றும் வேண்டுமென்றே செய்திருந்தால் தங்கள் எதிர்வினை வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படை வீரர்கள் தெரியாமல் செய்துவிட்டதால் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை எனக் கூறியிருக்கிறார்.

இந்தக் காலத்தில் சாதாரண கவுன்சிலரே நான் யார் தெரியுமா, என்னையே உள்ளே விடமாட்டீர்களா என பல இடங்களில் பகட்டாக நடந்துகொள்ளும் சூழலில், மூத்த அமைச்சரான முத்துசாமி மிகுந்த பக்குவத்தோடு இந்த விவகாரத்தை அணுகியிருக்கிறார். இதனிடையே அமைச்சர் நெஞ்சுல கை வைச்சு தள்ளுறாங்க எனக் கூறி கோவை திமுகவினர் விமான நிலையத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் ஆஃப் செய்து அனுப்பி வைத்தார் அமைச்சர் முத்துசாமி.
இது தான் அரசியல் முதிர்ச்சி என்பது. முத்துசாமியை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்திலேயே போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். 80 வயதை கடந்தும் இன்னும் ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்கிறார். நேற்றுக் கூட ஈரோடு வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வழியனுப்பி வைக்கவே கோவை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது தான் இந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்க விரும்பியே இந்த விவகாரத்தை அமைச்சர் முத்துசாமி பெரிது படுத்தவில்லை. ஈரோடு மாவட்டத்திற்கு மட்டுமல்ல கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் முத்துசாமி இருப்பதால், 2 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர் வசம் உள்ளது. இதனால் அதற்கேற்றவாறு தேர்தல் பணிகளில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications