மத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்
கோவை: டெல்லி வன்முறைகளைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு எந்த நிபந்தனையுமின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று இரவு மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

டெல்லியில் விவசாயிகள் போராட்டங்களைத் தொடர்ந்து இன்று வன்முறை நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து மத்திய பாஜக அரசு விவசாய சட்டங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் விவசாய சட்டங்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற அதிமுக ஆதரவு அளித்தது. தற்போதும் விவசாய சட்டங்களை நியாயப்படுத்தி பேசி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஆகையால் தமிழக விவசாயிகள், மக்கள் மற்றும் அகில இந்திய அளவில் போராடும் விவசாயிகளிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications