கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீழ்வேன் என்று நினைத்தாயோ.. மீண்டும் கமல்.. அதே கோவையில்! அரசியல் அதிரடிக்கு ரெடியாகும் மநீம

Google Oneindia Tamil News

கோவை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல், மீண்டும் மக்கள் பணியைத் தொடங்கி உள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 2021 சட்டசபைத் தேர்தலில் கமல் மாநிலம் முழுக்க பிரசாரம் செய்தார்.

அந்தத் தேர்தலில் குறிப்பிட்ட அளவுக்காவது இடங்களை மக்கள் நீதி மய்யம் பெறும் என்றே அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். இருப்பினும், அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை.

ஃபிளைட்டே பரவாயில்லை போலயே.. ஓ மை காட்.. ஊபர் டாக்ஸி கட்டணம் பார்த்தீங்களா.. புலம்பும் மக்கள்ஃபிளைட்டே பரவாயில்லை போலயே.. ஓ மை காட்.. ஊபர் டாக்ஸி கட்டணம் பார்த்தீங்களா.. புலம்பும் மக்கள்

கமல்

கமல்

டெல்லியில் ஆம் ஆத்மியை போல ஊழல் ஒழிப்பை முக்கிய முழக்கமாகக் கொண்டு இறங்கிய மக்கள் நீதி மையம் கடைசி நேரத்தில் சமக, ஐஜேகே கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு களமிறங்கியது. கமல் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தாலும் கூட பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. சுமார் 140 தொகுதிகள் அக்கட்சி போட்டியிட்ட போதிலும், வெறும் 2.62% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

தோல்வி

தோல்வி

குறிப்பாகக் கட்சியின் தலைவரான கமல்ஹாசனே தோல்வி அடைந்தார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவியது. இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் அவர் தோல்வியடைந்தார். அதன் பின்னர் கட்சிக்குள் பெரிய குழப்பமே வெடித்தது. பல முக்கிய நிர்வாகிகள் வரிசையாக வெளியேறினர்.

 மீண்டும் மக்கள் சேவை

மீண்டும் மக்கள் சேவை

கட்சியில் கமலுக்கு அடுத்து முக்கிய முகமாக இருந்தவரும் கொங்கு மண்டலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்று இருந்தவருமான மகேந்திரன் கூட கட்சியில் இருந்து விலகினார். ஆனால், இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் கமல் தொடர்ந்து நடிப்பு, அரசியல் இரண்டிலும் மாறி மாறி பயணித்து வருகிறார். சில காலம் படங்களில் பிஸியாக இருந்த கமல் இப்போது மீண்டும் மக்களைச் சந்திக்கத் தொடங்கி உள்ளார்.

கோவை

கோவை

அதுவும் சட்டசபைத் தேர்தலில் எங்குத் தோற்கடிக்கப்பட்டாரோ, அதே இடத்தில் இருந்து மீண்டும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். கோவை தெற்கு தொகுதிக்குச் சென்ற கமல், அங்கு மக்களைச் சந்தித்து தொகுதிகளில் இருக்கும் முக்கிய குறைகளைக் கேட்டறிந்தார். கெம்பட்டி காலனி பகுதியில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்த கமல், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

 கழிப்பறை

கழிப்பறை

தொடர்ந்து மக்களிடையே பேசிய அவர், "800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் போதிய கழிவறைகள் கூட இல்லை.. ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருக்கிறது. கழிவறை நாங்கள் கட்டித் தருகிறோம். இது தேர்தல் வாக்குறுதி எல்லாம் இல்லை. எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இப்போது கிராம சபையை நடக்கிறது என்றால் அதற்கு நாங்களும் தா் காரணம். மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு, சமூகத்திற்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு.

 புரிந்து கொள்ளுங்கள்

புரிந்து கொள்ளுங்கள்

நாங்கள் கட்டித்தரும் கழிப்பறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் பொறுப்பு.! கண்டிப்பாக இதைப் பார்க்க நான் வருவேன். அப்போது சுத்தமாக இல்லையென்றால் நானே சுத்தம் செய்வேன். கடந்த தேர்தலில் எனக்கு வாக்களித்ததாகவே மக்கள் சொல்கிறார்கள். ஆனால் யார் தோற்கடித்தார்கள் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.

 தொண்டர்கள்

தொண்டர்கள்

இது கமல் ரசிகர்களுக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. தோல்விகளைக் கண்டு அஞ்சி விலகுபவர் தங்கள் தலைவர் இல்லை என்றும் அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம் பெறுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

English summary
Kamal Haasan is in coimbatore on makkal needhi maiam party event: Kamal Haasan to start people welfare schemes again in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X