Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது - கார்த்திக் சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தவொரு கட்சியாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றும், தமிழகத்தில் இண்டி கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கோவையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: கோவையில் மலுமிச்சம்பட்டியில் காங்கிரஸ் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவாக உள்ளது. தமிழகத்தில் அரசியல் நிலவரத்தைப் பொருத்த வகையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது.

Karthik chidamabaram congress tamilnadu politics

தமிழக துணை வேந்தர்கள், தமிழக ஆளுநர் முகாமில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்துள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதை அதிமுகவின் கடைமட்ட தொண்டர்கள் விரும்பவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று கூறிய பிறகு ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் இப்போது மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள். எனவே அதை வெல்லும் கூட்டணி என்று கூற முடியாது.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் எந்தளவு வாக்கு பெறும் என்று தெரியவில்லை. அரசியல் கட்சி என்றால் அனைத்து பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும். அவர்கள் தனித்து நிற்பார்களா? என்ன முடிவு என்று தெரியவில்லை. கட்டமைப்பு மிக முக்கியம். அதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி என்ன நிலை எடுக்கும் என்று தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டுவது தவறில்லை. அனைத்து கட்சிகளுக்குமே அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கும் அந்த ஆசை இருக்கும். தமிழகத்தில் 1967 க்கு பிறகு காங்கிரஸ் கட்சி அவ்வாறு இல்லை. இதில் எனக்கு வருத்தம்தான்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக பெரும் தொகுதிகளை வைத்து காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிட கேட்டு பெறுமா? என்று கூற முடியாது. கூட்டணி தர்மம் என்று உள்ளது. ஆளும் கட்சியாகவும் இல்லாமல், எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் இருப்பதால் காங்கிரஸிற்கு ஒரு தர்ம சங்கடமான நிலை உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பேச்சை சரியாக கேட்காமல் புரிந்து கொள்ளாமல் அவரது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக உள்ளது. தேர்தலில் அவர்களை எதிர் கொள்வதற்கு இந்திய கூட்டணியில் வலிமை தேவை என்ற அர்த்தத்தில் தான் பேசியுள்ளார்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது செந்தூர் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை வரவேற்கிறோம். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் வித்தியாசமானது. இதில் மத ரீதியாக பிரித்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பல கேள்விகள் உள்ளன.

அங்கே பாதுகாப்பு இல்லாதது குறித்தும், பாதுகாப்பு குறைபாடு குறித்தும் கேள்விகள் இருக்கின்றன. எனவே தான் பாராளுமன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதத்தின் போது பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு இந்திய ஜனாதிபதி கடிதம் அனுப்பி உள்ளார். உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இந்திய ஜனாதிபதி எழுதி இருக்கும் கடிதத்திற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. இருப்பினும் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் இந்தப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர், பிற மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி எடுத்திருக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+