பொள்ளாச்சி பாலியல் கொடுமை.. 48 சாட்சிகளிடம் நடந்த விசாரணை.. ஒருவர் கூட பிறழ்சாட்சி அளிக்கவில்லை!
கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சியங்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதுதொடர்பான சில வீடியோக்கள் வெளியாகிய போது, இளம்பெண்கள் பேசிய வார்த்தைகள், கதறிய ஆடியோ மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது.

சிபிஐ விசாரணை
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். ஆனால் வழக்கை சிபிஐ எடுத்தது. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன், வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு, ஹேரேன் பால், அருளானந்தம், அருண் குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றம் தீர்ப்பு
இவர்களின் மீது பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை கோவை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
அரசு தரப்பில் கோரிக்கை
இதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி நந்தினி தேவி, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். அதேபோல் அரசு தரப்பில், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பிறழ்சாட்சியே இல்லை
இந்த வழக்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது சாட்சியங்கள் தான். மொத்தமாக பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக 48 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைவரும் தாமாக முன் வந்து சாட்சியம் அளித்த நிலையில், ஒருவர் கூட பிறழ்சாட்சி ஆகவில்லை. குற்றப்பத்திரிகையில் என்ன இருந்ததோ, அதனை சாட்சியங்கள் நீதிமன்றத்திலும் கூறி இருக்கின்றனர்.
டிஜிட்டல் ஆதாரங்கள்
அதேபோல் டிஜிட்டல் ஆதாரங்களும் இந்த வழக்கில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனால் அழிக்கப்பட்ட வீடியோ, ஆடியோ ஆதாரங்களை மீட்டெடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications