2050 வரை குடிநீர் பிரச்சினை இல்லை.. கோவை மக்கள் ஹேப்பி.. திறப்புவிழாவுக்கு முதல்வர் ரெடி!
கோவை: 2050 ஆம் ஆண்டு வரை இனி கோவை மக்களுக்குக் குடிநீர் பிரச்சினை என்பதே இல்லை! 620 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட பில்லூர் 3ஆம் கட்ட குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன.
இன்னும் நாள்களில் இப்பணி முழுமையாக நிறைவடையப் போகிறது. இதன்மூலம் அதிக அளவிலான குடிநீர் வசதியைப் பெறப் போகிறது கோவை.

இந்தத் திட்டத்தால் என்ன பலன்? கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், "முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு திட்டங்களைக் கோவையில் செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாகச் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி எனப் பலவற்றைச் செய்து தந்து வருகிறோம்.

இதுவரை கோவை மாநகர மக்கள் குடிநீர்த் தேவைக்காகச் சிறுவாணி அணையை மட்டுமே நம்பி இருந்து வந்தனர். சில காலங்களில் பருவமழை பொய்க்கும் போது தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை இருந்து வந்தது. அதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், கிட்டத்தட்ட 620 கோடி ரூபாய் செலவில் பில்லூர் 3வது குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டார்.

அதனையடுத்து அப்பணிகள் தொடங்கப்பட்டன. மின்னல் வேகத்தில் செயல்பட்டு அதற்கான பணிகள் இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளன.
இதன் மூலம் கோவை மாநகராட்சிக்கு 178 எம்.எல்.டி குடிநீர் கிடைக்க உள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்து பிறகு கோவையில் குடிநீர் பிரச்சினை என்பதே இருக்காது. அதற்காகக் கோவை மக்கள் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்கிறார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவை மாவட்ட நிர்வாகப் பொறியாளர் செந்தில் குமார், "கோவைக்குத் தேவையான குடிநீரை மூன்று விதமான திட்டங்கள் மூலம் பெற்று வருகிறோம். அனைவருக்கும் தெரிந்த சிறுவாணி அணை மூலமாக நீரைப் பெறுகிறோம்.

அடுத்து ஆழியாறு. மூன்றாவதாகப் பவானி. தற்போது கோவை மாநகராட்சியின் மக்கள் தொகை 18 லட்சம். இந்தத் தொகை 2050களில் 32 லட்சம் அளவுக்கு உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த மக்கள் தொகைக்குத் தேவையான குடிநீர் வளத்தை நாம் பெருக்கவேண்டும், அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் பில்லூர் 3 ஆம் குடிநீர் திட்டத்தை அறிவித்தார்.
இந்தத் திட்டம் ஒரு தொலைநோக்கு பார்வையைக் கொண்ட திட்டம். 2050ல் கூட நமக்குக் குடிநீர் பிரச்சினையை வரவிடாமல் இத்திட்டம் தடுக்கும்.

இதன் தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையம் பக்கம் சமயபுரத்தில் உள்ளது. இது பவானி ஆற்றுப்பகுதி. அங்கிருந்து 15 கிலோமீட்டருக்குத் தண்ணீரைப் பம்பு செய்து அனுப்புகிறோம். அது மருதூர் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேரும்.

அதன் பின் கோயம்புத்தூர் பன்னிமடை 144 லட்சம் கொள்ளளவு கொண்ட ஒரு மாபெரும் நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரானது சேமிக்கப்படும். அதன் பிறகு அங்கிருந்து தரைவழியே கோவை மாநகரம் முழுக்க விநியோகம் செய்யப் போகிறோம். இதற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.

கோவையை ஆறு மண்டலமாகப் பிரித்துள்ளோம். அந்த ஆறு மண்டலங்களில் உள்ள அனைத்து நீர்த்தொட்டிக்கும் நீர் பகிர்ந்து அனுப்பப்படும். இதில் சிறுப்பு என்னவென்றால் முழுக்க முழுக்க தரைவழியே விநியோகம் செய்யப் போகிறோம். எங்கேயும் நீரை பம்ப் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இதனால் மின்சார தேவை அதிகம் இருக்காது" என்கிறார்.

கோவை மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், "ஏற்கெனவே திமுக ஆட்சியில்தான் பில்லூர் முதல் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அன்றைக்கு முதல்வராகக் கலைஞர் கருணாநிதி இருந்தார். அடுத்து இரண்டாம் பில்லூர் திட்டமும் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப் பட்டது.

அதன்பின்னர் கவுண்டம்பாளையம் வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டமும் திமுக ஆட்சியில் வந்ததுதான். மீண்டும் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் திமுகதான் கொண்டுவந்தது. இன்று மீண்டும் 3வது பில்லூர் குடிநீர்த் திட்டத்தையும் திமுகதான் கொண்டுவந்து நிறைவேற்றித் தந்துள்ளது" என்கிறார்.

கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஐஏஎஸ், "இன்னும் ஓரிரு மாதங்களில் இத்திட்டம் மூலம் முழுமையாக அனைத்து மக்களையும் போய்ச் சேர உள்ளது. இதனால் 2050 வரை தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சே இருக்காது. 23 எம்.எல்.டி நீர் சேமிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதைக் கோவையைச் சுற்றி உள்ள ஊராட்சி மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்" என்கிறார்.

இத்திட்டத்திற்கான குடிநீர் குழாய்கள் பூமிக்குக் கீழாக உள்ள சுரங்கப்பாதைகள் வழியே கொண்டுவர உள்ளனர். ஏதேனும் நீர் கசிவு பிரச்சினை என்றால் அது சாலைக்கு மேல் வராது. பூமிக்குள் உள்ள சுரங்கப்பாதையின் உள்ளாகவே ஓடும். அதற்குள் ஒரு வானகமே செல்ல முடியும்.

ஏறக்குறைய 10 மீட்டர் அகலமும், 6 மீட்டர் உயரமும் கொண்டது இந்தச் சுரங்கப்பாதை. மொத்தம் 900 மீட்டர் நீளம் கொண்டது பாதை இது. உள்ளேயே மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, மின் விளக்குகள் போடப்பட்டுள்ளன.

எப்படிப் பார்த்தாலும் இந்தக் குடிநீர்த் திட்டம் ஏதோ கடமைக்குச் செய்யப்பட்டுள்ள திட்டம் அல்ல. மாபெரும் மாடர்ன் திட்டம். இனி கோவை மக்கள் 2050 ஆம் ஆண்டை மகிழ்ச்சியாக வரவேற்கலாம்! அதுவரை தண்ணீர் பிரச்சினையே இந்தக் கோவைக்கு இல்லை!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications