வீட்டின் அருகே விளையாடிய சிறுமி.. பக்கத்து வீட்டு பெண்ணால் நேர்ந்த கொடூரம்.. ஆடிப்போன கோவை
கோவை: கோவை மாவட்டம், அம்மன் குளத்தில் வீட்டின் அருகே விளையாடிய குழந்தை மீது நாயைவிட்டு பக்கத்து வீட்டு பெண் கடிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை இராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுவாகவே செல்லப் பிராணிகள் வளர்ப்பு என்பது இன்றைய காலத்தில் அதிகமாக காணப்படுகிறது. சிறந்த தனிமைப் போக்கிகளாகவும், சில குடும்பத்தில் உறுப்பினராகவும் மாறிவிடுகின்றன இந்த செல்லப் பிராணிகள். வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், மாடுகளால் சில நேரங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது.

வீட்டில் இருந்து வெளியில் செல்லும் நாய்கள், மாடுகள், தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சில நேரங்களில் தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை விடாமல் விரட்டுவது, தாக்குவது போன்ற அச்சமூட்டும், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டம், அம்மன் குளத்தில் வீட்டின் அருகே விளையாடிய 1 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மீது பக்கத்து வீட்டு பெண் நாயைவிட்டு கடிக்கவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை இராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், அம்மன் குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கே ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அங்கு உள்ள எல் பிளாக்கில் பொன்வேல் (33) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் இவருடைய 5 வயது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் கண்ணன் என்பவரது மனைவி சௌமியா குடும்பத்துடன் வசித்து வருகிறார். சௌமியா வீட்டில் 4 நாய்களை வளர்த்து வரும் நிலையில், பொன்வேலின் மகள் வீட்டின் அருகில் விளையாடியதால், சௌமியா நாயைவிட்டு அவரை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பொன்வேல், கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் , சௌமியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை நாய் கடித்தது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அந்த நாயை காப்பகத்திற்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications