நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல்.. அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியை.. நள்ளிரவில் கைது செய்த போலீஸ்
கோவை: கோவையில் வார பத்திரிக்கையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையிலும், பொதும அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈசா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக வார பத்திரிக்கையை (நக்கீரன்) கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வாரப் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நாக்கை அறுத்து விடுவதாக கூறி பேசி இருந்தார்.

இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓம்கார் பாலாஜியை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த 27 ஆம் தேதி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் பேசியிருந்தார். இது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஓம்கார் பாலாஜயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று காலை போராட்டம் நடத்த அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி இன்று காலை 10.00 மணியளவில் C.2 காவல் நிலையம் முன்பு அர்ஜூன் சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications